-

புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

27 ஜன., 2021

தடைகளை உடைத்தெறிந்த தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள்

www.pungudutivuswiss.com
தடைகளை உடைத்தெறிந்த தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள், இன்று (27) காலை குருந்தூர்மலைக்குச் சென்று, அங்குள்ள நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்ததுடன், வழிபாடுகளையும் மேற்கொண்டனர்.

தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சார்ள்ஸ் நிர்மலநாதன், சிவஞானம் சிறீதரன், வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன், கரைச்சி பிரதேச சபை தவிசாளர் அ.வேளமாளிகிதன், பச்சிலைப்பள்ளிப் பிரதேச சபை தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன், பிரதேச சபை உறுப்பினர்களான சிலோகேஸ்வரன், த.றமேஷ், ச.ஜீவராசா உள்ளிட்ட குழுவினரே, இவ்வாறு, இன்று (27) காலை, குருந்தூர் மலைக்குச் சென்றுள்ளனர்.

இதேவேளை, அங்கிருந்த இராணுவத்தினர், தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் சென்ற வாகன இலங்கங்களைப் பதிவு செய்து அச்சுறுத்தும் வகையில் செயற்றபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ad

ad