-
18 மார்., 2014
- பந்தை பவுண்டரிக்கு விளாசும் ஸ்டிர்லிங்.
இருபது ஓவர் உலகக் கோப்பை தகுதிச் சுற்று ஆட்டத்தில் ஸ்டிர்லிங் அதிரடியாக அரைசதம் அடித்து உதவ, ஜிம்பாப்வே அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் அயர்லாந்து அணி வீழ்த்தியது.
வங்கதேசத்தின் சில்ஹெட்டில் திங்கள்கிழமை நடைபெற்ற குரூப் பி பிரிவு தகுதிச் சுற்று ஆட்டத்தில் இரு அணிகளும் மோதின.
கிளிநொச்சியில் இரு இளைஞர்களை தேடுகிறது இராணுவம்: தகவல் வழங்குபவர்களுக்கு 5 லட்சம் பரிசு

கிளிநொச்சி நகர் பகுதிகள் எங்கும் இரண்டு இளைஞர்களைப் பற்றிய தகவல்களை வழங்குபவர்களுக்கு ஐந்து இலட்சம் ரூபா பணம் வழங்கப்படும் என அறிவித்து இரு இளைஞர்களின் புகைப்படத்துடன் கூடிய துண்டுப் பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளன.
கூட்டணியில் இருந்து வெளியேற முடிவு செய்துள்ள பாமக சாதிய அமைப்புகளைக் கொண்ட சமூக ஜனநாயக கூட்டணி அறிவிப்பை புதன்கிழமை (மார்ச் 19) வெளியிடக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் பாஜக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிகவுடன் ஏற்பட்டுள்ள தொகுதிப் பங்கீடு பிரச்னை காரணமாக கூட்டணியில் இருந்து
17 மார்., 2014
கடலூர்: நெய்வேலி அனல் மின் நிலையமான என்.எல்.சி.யில் மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர் துப்பாக்கியால் சுட்டதில் ஒப்பந்த தொழிலாளி ஒருவர் பலியானதைத் தொடர்ந்து அங்கு பதற்றம் ஏற்பட்டது.
இதனையடுத்து கண்ணீர் புகைக்குண்டு வீசப்பட்டது.
என்.எல்.சி. நிறுவனத்தில் ராஜா என்ற தொழிலாளி முதலாம் மின்நிலையத்தில் பணியாற்றி வந்தார்.
திருச்சி நாடாளுமன்ற தொகுதியின் அ.தி.மு.க. வேட்பாளரான குமாருக்கு வாக்கு சேகரிக்க கந்தர்வக்கோட்டை தொகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார் அமைச்சர் விஜய பாஸ்கர். கறம்பக்குடி ஒன்றியத்திற்குட்பட்ட மாங்கோட்டை பகுதியில் பிரசாரம் முடித்து வந்திருக்கிறார்கள்.
தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் அறிவிப்பு
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் பட்டியல் வெளியீடு.
தமிழகத்தில் 9 தொகுதிகளில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.
இந்தப் பட்டியலை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் சென்னையில் வெளியிட்டார்.
'மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 9 வேட்பாளர்களில் இரண்டு பேர் பெண்கள்; இருவர் தலித் சமூகத்தைச் சார்ந்தவர்கள். இதில் விருதுநகர் பொது தொகுதியில் தலித் வேட்பாளர் நிறுத்தப்பட்டுள்ளார்' என்று ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
வேட்பாளர் பட்டியல் விவரம்:
வடசென்னை - உ. வாசுகி
கோயம்புத்தூர் - பி.ஆர். நடராஜன்
பாஜக கூட்டணியில் சிக்கல் தீர்ந்தது; தொகுதிப் பங்கீட்டில் கட்சிகள் சமரசம்- இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக வாய்ப்பு
பாஜக கூட்டணி தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை.
பாஜக கூட்டணியில் நிலவி வந்த தொகுதிப் பங்கீடு சிக்கல் முடிவுக்கு வந்துள்ளது. கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிப் பட்டியலை பாஜக மேலிடம் இன்று வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் பாஜக தலை மையிலான கூட்டணியில் தேமுதிக, பாமக, மதிமுக, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதிக்கட்சி ஆகியவை இடம் பெற்றுள்ளன. ஆனால், ஆரம்பத்தில் இருந்தே தொகுதிப் பங்கீட்டில் சிக்கல் ஏற்பட்டது.
பேச்சுவார்த்தையில் சிக்கல்
சில தொகுதிகளை பாமகவும் தேமுதிகவும் விடாப் பிடியாக கேட்டதால் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை. நீண்ட நாட்களாக இழுபறி நிலையே நீடித்தது. அதே நேரத்தில் பாஜக தலைவர்களும் நிர்வாகிகளும் கூட்டணியில்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)