புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 டிச., 2012


சாப்பிட்ட இலையில் உருண்டு ஏராளமானோர் நேர்த்திக்கடன்
இந்த நிகழ்ச்சி ஸ்ரீவில்லிபுத்தூர், மடவார்வளாகம், ஸ்ரீவைத்தியநாத சுவாமி திருக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும். வியாழக்கிழமை அதிகாலை அம்பாளுக்கு ருத்ர ஜபம் மற்றும் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர் பக்தர்கள் சாப்பிட்ட இலையில் நோய் தீரவும், குழந்தைப் பேறு வேண்டியும் பிரார்த்தனை செய்து கொண்ட பக்தர்கள் தங்கள் நேர்த்திக் கடனைச் செலுத்தினர். இதற்கான ஏற்பாடுகளை மகாதேவ அஷ்டமி அன்னதான டிரஸ்ட் செய்திருந்தது.
கார்த்திகை மாதம் வரும் அமாவாசைக்கு முந்தைய அஷ்டமியை மகாதேவ அஷ்டமி அல்லது வைக்கத்து அஷ்டமி என்று அழைக்கிறார்கள். அன்றைய தினம் பக்தர்களுடன் அமர்ந்து இறைவன் சாப்பிடுவதாக ஐதீகம். இறைவன் சாப்பிட்ட இலையில் உருண்டால் நோய் தீரும் என்பது நம்பிக்கை.

ad

ad