சனி, ஏப்ரல் 26, 2014

ஜெரோமி கொலை செய்யப்படவில்ல; சட்ட வைத்திய அறிக்கை 
news
யாழ்ப்பாணம் பெரியகோயில் பகுதியில் உள்ள கிணறில் இருந்து சடலமகா மீட்கப்பட்ட  ஜெரோமி கொன்சலிற்றா (வயது 22)  நீரில் மூல்கியே இறந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
 
குறித்த யுவதியின் சாவு தொடர்பாக அவரது குடும்பத்தினர் மட்டுமே ஜெரோமியின்  சாவுக்கு இரு கிறிஸ்தவ பாதிரியார்கள் தான் காரணம் என்றும் தெரிவிகின்றனர் எனினும் சாட்சியங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்று யாழ் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் விமலசேன தெரிவித்தார்.
 
இந்த சம்பவம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்-
 
ஜெரோமி கொன்சலிற்றா பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தபட்டு கொலை செய்யப்படவில்லை என்றும் அவர் நீரில் மூல்கியே உயிரிழந்ததாக சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இருப்பினும் இது தொடர்பாக  இரு பாதிரியாரிடமும் விசாரணைகள் மேற்கொண்டு வருவதாகவும் அவர்களிடம் இருந்து பெறப்பட்டவாக்கு மூலங்களில் தமக்கும் குறித்த பெண்ணிற்கும் தனிப்பட்ட தொடர்புகள் எதுவுல் இல்லை என்றும் மறைக்கல்வி கற்பித்தவர் என்ற ரீதியில் கல்வி செயற்பாடுகள் தொடர்பிலேயே தொலைபேசி மூலமான தொடர்பு வைத்திருந்ததாக தெரிவித்தார்.
 
எனினும் மே மாதம் 12 ஆம் திகதி நடைபெறவுள்ள வழக்கு விசாரணைகளின் போது குறித்த இரண்டு பாதிரியார்களையும் நீதி மன்றத்தில் முன்னிலைப்படுத்தி சாட்ச்சி பதிவுகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக குறிப்பிட்டார்.
 
இதேவேளை நீதிமன்ற உத்தரவு அறிக்கை கிடைத்த பின்பு தொலைபேசி நிறுவனங்களிடம் இருந்து குறித்த பெண்ணின் தொலைபேசி இலக்கத்தோடு தொடர்புகளை  பேணி வந்தவர்கள் பற்றிய தகவல்களை  வைத்து விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.