புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 ஆக., 2014


2016 இல் முதல்வர் வேட்பாளராவாரா ரஜpனி?: தமிழக அரசியல் களத்தை கைப்பற்ற பாஜக திட்டம்


எதிர்வரும் 2016ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் நடிகர் ரஜpனிகாந்தை முதல்வர் வேட் பாளராக முன்னிறுத்தி தமிழக அரசி யல் களத்தை கைப்பற்ற பாஜக
திட்டங்களை தீட்டி வருகிறது. இதில் விஜயகாந்த்;தையும் அரவணைத்து செல்ல தமிழக பாஜக தலைவர்க ளுக்கு கட்சித் தலைமை உத்தர விட்டுள்ளதாக தெரிகிறது.
இதுகுறித்து பாஜக நிர்வாகிகள் சிலர் கூறிய தாவது:
கடந்த நாடாளுமன்றத் தேர்த லுக்கு முன்பே அரசியல் பிரவேசம் குறித்து ரஜpனியிடம் மோடி நேரடி யாக பேசிவிட்டார். பாஜக தலைவ ராக அமித் 'h பதவி ஏற்றவுடன் அவரும் ரஜpனியுடன் பேசியிருக் கிறார். கடந்த சில நாட்களாக குஜராத்தின் முக்கிய அரசியல் பிரமு கர்கள் சிலர், ரஜpனி அரசியலில் இறங்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
நாடு முழுவதும் பல மாநிலங் களில் பெரும்பாலான இடங்களை பாஜக கைப்பற்றி ஆட்சி அமைத்த போதும் தமிழகத்தில் அக்கட்சியால் ஒரு இடத்தை மட்டுமே கைப்பற்ற முடிந்தது. இதனால் தமிழகத்தில் கட்சியை வலுப்படுத்த மிகவும் வலி மையான கூட்டணி தேவை என்று மோடி கருதுகிறார்.
அதேநேரத்தில் திராவிடக் கட்சிகளின் முதுகில் சவாரி செய்ய பாஜகவுக்கு விருப்பம் இல்லை. 'திராவிடக் கட்சிகளின் தற்போதைய சிக்கலான நிலையால் சில ஆண்டுகளில் தமிழகத்தில் மிகப் பெரிய அரசியல் வெற்றிடம் ஏற்படும். அதை பாஜக சரியாக பயன் படுத்திக்கொள்ள வேண்டும்'' என்று மோடி மற்றும் அமித்'hவுக்கு தமிழக பிரமுகர்கள் சிலர் அறிக்கை அனுப்பியுள்ளனர்.
எனவே பாஜக தனது வளர்ச்சி க்காக தமிழகத்தில் விஜயகாந்த் மற் றும் ரஜpனியை பயன்படுத்திக் கொள்ள நினைக்கிறது. இதனா லேயே கடந்த சில மாதங்களாக விஜயகாந்த்தை உயர்த்திப் பிடித்து வருகிறது பாஜக.
விஜயகாந்த்தும் பிரதமருக்கு கடித ங்கள் எழுதுகிறார். ஊழலை ஒழிப் பதில் பிரதமரை பாராட்டி அறிக்கை விடுகிறார். மோடியும் விஜயகாநத் ;துக்கு போன் செய்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்ததுடன், தமிழக த்தின் அனைத்து பாஜக தலைவர் ;களையும் நேரில் சென்று வாழ்த்த உத்தரவிட்டார்.
இதையடுத்து, ரஜpனிகாந்த்தை எப்படியாவது அரசியலுக்கு கொண்டு வந்தால் பாஜக கூட்டணியை தமிழக த்தில் வெற்றி பெற செய்துவிடலாம் என்று மோடி தரப்பு கருதுகிறது. அதற்காகவே குஜராத் அதிகாரிகள், தமிழகத் தின் மூத்த அரசியல் வல்லுநர்கள், தமிழகத்தின் சில பாஜக நிர்வாகிகள் ஆகியோரைக் கொண்ட தனிக் குழுவும் ஏற்படுத்தப் பட்டுள்ளது.
மேலும் தமிழகத்தில் பாஜக சுமார் 156 தொகுதிகள் வரை போட்டி யிடவும் அதில் 100 இடங்களை ரஜpனி தொடங்கும் தனிக் கட்சிக்கு அல்லது அவர் கைகாட்டும் வேட்பா ளருக்கு அளிக்கவும் திட்டமிட்டு ள்ளது. எல்லாவற்றுக்கும் மேலாக ரஜpனியை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தவும் பாஜக விரும்புகிறது. இதுகுறித்து ரஜpனியிடம் பாஜக தூதுவர்கள் விரிவாக எடுத்துக் கூறியுள்ளனர். ஆனால் ரஜpனி 2015இல் பேசிக்கொள்ளலாம் என்று கூறியிருக்கிறார். இவ்வாறு அந்த நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து அரசியல் விமர்சகரான ரவீந்திரன் துரைசாமி கூறும் போது, 'ரஜpனிக்கு பாஜக தூது விட்டது உண்மையே. அதனால் தான் தமிழக தலைவரான தமிழிசை சௌந் திரராஜன் பகிரங்கமாக ரஜpனியை பாஜகவில் இணைய கோரிக்கை விடுத்துள்ளார். எம்.ஜp.ஆர்., என்.டி. ஆர். ஆகியோர் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்து வெற்றி பெற்ற வர்கள். அந்த தலைவர்கள் மறைந் ;தாலும் அவர்களின் வாக்கு வங்கி வழிவழியாக அந்தக் கட்சிக்கு கிடை த்து வருகிறது.
ரஜpனி களம் இறங்கினால் பெரும் சக்தியாக உருவெடுக்கும் வகையில் சமூக, அரசியல் சு+ழல் தற்போது கனிந்துள்ளது.
மேலும் சாதி, மத ரீதியாக அல்லாமல் அனைத்து தரப்பின ரையும் கவரக் கூடியவராக அவர் இருப்பார்.
2015-ம் ஆண்டு மத்தியில் அவர் அரசியலில் பிரவேசிக்க வாய்ப்பு இருக்கிறது" என்றார்.

ad

ad