புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 ஆக., 2014

கொலைகார டிப்பருக்கு வழித்தட அனுமதி உண்டா ? 
 நேற்றுமுன்தினம் புத்தூரில் கர்ப்பிணிப் பெண் ஒருவரை மோதி உயிரிழப்பை ஏற்படுத்திய டிப்பர் வாகனத்துக்கு மணல் ஏற்றிச் செல்வதற்கான
வழித்தட அனுமதி பெறப்பட்டிருந்ததா என்பது குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
 
 
குறித்த டிப்பர் வாகனம் மகேஸ்வரி நிதியத்துக்காக மணல் ஏற்றிச் சென்றது என்றும் அந்த டிப்பருக்குரிய அனுமதிப்பத்திரத்தை சமர்ப்பித்து உறுதிப்படுத்துமாறு அந்த நிதியத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 
 
23 வயதுடைய குறித்த கர்ப்பிணிப் பெண்ணை டிப்பர் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதனால் கொதிப்படைந்த அந்தப் பகுதி  மக்கள் குறித்த டிப்பரை தீயிட்டு எரித்தனர். 
 
 
தற்போது அந்த டிப்பரின் சாரதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் அந்த டிப்பருக்கு மணல் ஏற்றிச் செல்வதற்கான அனுமதிப் பத்திரம் இல்லை என்று கூறப்படுகின்றது. அது தொடர்பில் யாழ்.பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகரிடம் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
 
 
குறித்த டிப்பருக்கு வழித்தட அனுமதி உள்ளதா என்பதனை அவர்கள் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. அது டிப்பரில் எரிந்து போயிருக்கலாம் என்று டிப்பர் உரிமையாளரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் எமக்குச் சமர்ப்பித்து உறுதிப்படுத்துமாறு அவர்களுக்குக் கூறியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

ad

ad