சனி, ஆகஸ்ட் 30, 2014தமிழில் மந்திரம் உச்சரித்த குருக்கள்! உலங்குவானூர்தி மூலம் பூமழை பொழிந்த விமானப்படை!
மட்டக்களப்பு மாவட்ட வரலாற்று சிறப்புமிக்க பெரியபோரதீவு முத்துவிநாயகர் ஆலயத்தின் மகா கும்பாபிசேகம் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றபோது எதிர்பாராத நேரத்தில் உலங்குவானூர்தி மூலம்
பூமழை பொழிந்தனர் விமானப்படையினர்.
கடந்த இரண்டு தினங்களாக ஆலயத்தில் எண்ணைக்காப்பு சாத்தும் நிகழ்வு நடைபெற்று இன்று கும்பாபிசேகம் நடைபெற்றது.
இதன்போது கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசதுரை சந்திரகாந்தனின் ஏற்பாட்டில் குடமுழுக்கு நடைபெற்றபோது விமானப்படையின் உலங்குவானூர்தி மூலம் பூமழை பொழியப்பட்டது.
இந்த கும்பாபிசேகத்தின்போது இராஜகோபுரம் மற்றும் பரிபால மூர்த்திகளின ஆலயங்களுக்கும் கும்பாபிசேகம் நடத்தப்பட்டது.
இந்த ஆலயத்தின் கும்பாபிசேகத்தின் சிறப்பம்சமாக தமிழில் மந்திர ஒலி ஒலிக்கப்பட்டு கிரியைகள் நடைபெற்றது.


கடந்த சில ஆண்டுகளாக இலங்கை இராணுவத்தினர் இந்து ஆலயங்கள் மீது அதீத பற்றுக்கொண்டவர்களாக நடந்துகொள்வதை காணக்கூடியதாக இருப்பினும், நல்லூரில் இலங்கை இராணுவத்தினர் காவடி எடுத்தமையும் ஆச்சரியத்துக்குரிய நகைப்பான விடயமே.
வரலாற்று சிறப்புமிக்க இந்து ஆலய திருவிழாக்களில் இலங்கை இராணுவத்தினர் உலங்குவானூர்தி மூலம் பூமழை பொழிவது அடிக்கடி நிகழ்த்தப்பட்டு வந்தாலும்  சில பல இந்து ஆலயங்கள் இடித்தழிக்கும் நிகழ்வுகள் தொடர்கின்றன என்பது உண்மையே!