புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 ஆக., 2014

குற்றப்பத்திரிகை தாக்கல்மாறன் சகோதரர்கள் மீது 


ஏர்செல் நிறுவனத்தின் பங்குகளை மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனம் வாங்கியது தொடர்பான விவகாரத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் மற்றும் அவரது சகோதரர் கலாநிதிமாறன் மீது மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) இன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.

முன்னதாக நேற்று தயாநிதிமாறன்  உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை நீதிபதிகள் எச்.எல்.தட்டூ, எஸ்.ஏ.பாப்டே, ஏ.எம்.சாப்ரே ஆகியோர் அடங்கிய அமர்வு வியாழக்கிழமை பரிசீலித்தது. அப்போது, தயாநிதி மாறன் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் அரிமா சுந்தரம் வாதிட்டதாவது:

ஏர்செல் -மேக்சிஸ் பேர வழக்கில், மலேசியாவில் சிபிஐ நடத்தி வரும் விசாரணை முடிக்கப்படாத நிலையில், இந்தியாவில் நடைபெற்ற விசாரணை அடிப்படையில் தயாநிதி மாறன் உள்ளிட்டோர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யத் திட்டமிட்டுள்ளது. சட்டப்படி, விசாரணை முடிவடையாமல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யக் கூடாது. எனவே, சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தடை விதிக்க வேண்டும் என்று வழக்குரைஞர் அரிமா சுந்தரம் கேட்டுக் கொண்டார்.

ஆனால், அவரது வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், "ஒரு வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வது என்பது சிபிஐயின் அதிகாரத்துக்கு உள்பட்ட நடவடிக்கையாகும். அதற்கு நீதிமன்றம் தடையாக இருக்காது. 

தயாநிதி மாறனுக்கு எதிராக சிபிஐ தாக்கல் செய்யும் குற்றப்பத்திரிகை முழுமை பெறாமல் உள்ளதா, இல்லையா என்பதை முன்கூட்டியே எவ்வாறு கணிக்க முடியும்? முதலில் சிபிஐ குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்யட்டும். அதன் பிறகு, அதில் குறைகள் இருந்தால் அது குறித்து நீதிமன்றத்தில் முறையிட மனுதாரருக்கு (தயாநிதி மாறன்) உரிமை உண்டு. எனவே, இந்த மனு மீது உத்தரவு பிறப்பிக்க இயலாது' என்று தெரிவித்தனர்.

இதையடுத்து, மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்யும் முன்பே அதை திரும்பப் பெற்றுக் கொள்ள அனுமதிக்கும்படி வழக்குரைஞர் அரிமா சுந்தரம் கேட்டுக் கொண்டார். அதை நீதிபதிகள் ஏற்றுக் கொண்டனர்.

இன்று டெல்லி நீதிமன்றத்தில் மலேசியாவின் மேக்ஸிஸ் நிறுவனத்திற்கு ஏர்செல்லை விற்க கட்டாயப்படுத்தியதாக முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மீது வழக்கு பதிவு செய்யப்ப ட்டுள்ளது. 

இந்த குற்றப்பத்திரிகையில் தயாநிதி மாறன் மற்றும் அவரது சகோதரர் கலாநிதி மாறன் உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரின் பெயர்களும் சேர்க்கப்பட்டுள்ளன. சன் டைரக்ட் டி.வி., பிரைவேட் லிமிடெட் நிறுவனமும் குற்றவாளியாக குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு செப்.11ம் தேதி விசாரணைக்கு வருகிறது.

ad

ad