புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 ஆக., 2014

யாழ் மாநகரசபையின் பிரதி மேயா் இறுதிக் கூட்டத்தில் சொல்வது என்ன?
அரசியல் கட்சிகள் தமக்குள் ஒரு ஒற்றுமையினை பெற்றுக்கொள்வதன் மூலம் உரிமையினையும் அபிவிருத்தியினையும் பெற்றுக் கொள்ள முடியுமென யாழ். மாநகர சபையின் பிரதி முதல்வர் எஸ். ரமீஸ் தெரிவித்தார். 


யாழ்.மாநாகர சபையின் 8வதும் இறுதியுமான மாதாந்த கூட்டம் நேற்று வியாழக்கிழமை மாநகர சபை மாநாட்டு மண்டபத்தில் முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா தலைமையில் நடைபெற்றது அதன்போது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் கூறுகையில்- இவ்வாறான அரசின் மத்தியில் இணக்க அரசியல் நடத்துவதன் மூலம் அபிவிருத்திகளைப் பெற்றுக்கொள்ள முடியும். அவ்வாறான ஒரு சூழ்நிலையில் தான் இந்த சமூகத்தின் எதிர்காலம் பற்றி புரிந்துகொள்ள முடியும்.

எங்களுக்குள் நாம் முரண்பட்டுக் கொண்டு- எமக்குள்ளே நாம் இணக்க அரசியலை நடத்தாமல் இருக்கின்ற காரணத்தினால் எதிர்கால சந்ததியினர் பற்றி சிந்திக்க வேண்டும்.
எமது இளைய தலைமுறையினரை அல்லது எமது சிறார்களை யுத்தத்திற்குள்ளேயோ அல்லது மிக மோசமான காலகட்டத்திற்குள்ளேயோ கொண்டு செல்லக் கூடாதென்று அரசியல் வாதிகளிடம் கேட்டுக் கொள்கின்றேன்.

முஸ்லீம் அரசியல் சீரான சமாhத்தியமான அரசியலாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.30 வருட யுத்தத்தின் போது மிக மோசமான முடிவுறுத்தப்பட்டுள்ள நிலையில் மீண்டும் தென்பகுதியில் உள்ள பெரும்பான்மை மக்களின் மத்தியில் உள்ள அரசியல் பிரமுகர்களினால்- தீவிரவாதசக்திகளினாலும்- இனப்பிரச்சினையை விட்டு மதப்பிரச்சினை கொண்டு வருவதற்கான முயற்சிகள் எடுக்கப்படுகின்றன.
குறிப்பாக முஸ்லீம் சமூகத்தினை நோக்கி இச்செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றது.அதன் உச்சக்கட்டமாக தான் அண்மையில் பேருவளையில் நடந்த சம்பவங்கள் எடுத்துக் காட்டுகின்றன. இந்த வேளையில் முஸ்லீம்களை பொறுத்தமட்டில்,- எல்லா மக்களுடனும்- சந்தோஷமான சமாதானமாக வாழ வேண்டும் என்று விரும்புகின்றோம்.

தமிழ் மக்களுடன் எவ்வாறு சந்தோஷமாகவும்- ஒற்றுமையாகவும் வாழ விரும்புகின்றோமே அதே போன்று தென்பகுதியில் உள்ள சிங்கள மக்களுடனும் ஒற்றுமையாகவும் சந்தோஷமாகவும் வாழ விரும்புகின்றோம்.

முஸ்லீம்களை கொல்வதற்காக தாக்குதல் நடத்தப்பட்ட வேளையில்- முஸ்லீம்களை பிரதிநிதித்துவப்படுத்தி இருக்கும் இரண்டு கட்சிளான அகில இலங்கை காங்கிரஸ் கட்சி மற்றும் மக்கள் காங்கிரஸ் இந்த இரண்டு கட்சிகளும் எவ்வாறு செயற்பட்டன என்பது பற்றி சிந்திக்க வேண்டும்.

உரிமை மற்றும் அபிவிருத்தி என்று பார்க்கும் போது இரண்டு தரப்பினரும் ஒன்றுபட்டு செயற்பட்டால் முஸ்லீம் சமூகம் தாக்கப்படும் வேளையில் இரண்டு தரப்பினரும் சரியான முறையில் செயற்பட்டார்கள்.

இதேபோன்று அரசியலை தமிழ் மக்கள் மத்தியில் செய்வதன் மூலமாக தான், தமிழ் மக்களுக்கு விமோசனமாக சூழலை உருவாக்க முடியும். முஸ்லீம் அரசியல்வாதிகளின் ஒற்றுமைக்கு பின்பாக என்ன இருந்ததென்று சிந்திக்க வேண்டும்.

அரசியல்வாதிகள் தமக்குள்ளே ஒரு ஒற்றுமையினை ஏற்படுத்திக் கொள்வது மிகவும் கடினமான விடயமாகும். முஸ்லீம் சமூகத்தின் பின்னால் முஸ்லீம் சமூகத்தினை வழிநடத்தவும்- முஸ்லீம் கட்சிகளை வழிநடத்தவும்- புத்தி ஜீவிகளின் சகூகம் செயற்பட்டு வருகின்றது.

ஒரு அமைப்பினை தமிழ் மக்கள் மத்தியில் அமைப்பது தான் எதிர்காலத்தில் உரிமையோடு கூடிய அபிவிருத்தியினை எதிர்பார்க்க முடியும்.
அதற்கு நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும். பிரச்சினைகள் வருவது இயற்கை அவற்றினை எவ்வாறு தீர்ப்பது- எவ்வாறு கையாள்வது என்பதுடன்- பிரச்சினை ஊடாக எமது உரிமைகளை பெற்றுக் கொள்வது என்பது சிந்திக்க வேண்டிய விடயம்.

தமிழ் மக்கள் மத்தியில் புத்திஜீவிகள் ஒன்றுபட வேண்டும். புத்திஜீவிகள் அரசியலுக்குள் நேரடியாக வராமல்- அரசியல் போக்கு மற்றும் அரசியல் வழிநடத்தல்கள் பற்றி சிந்திக்க வேண்டும்.
அரசியல் வாதிகள் ஒன்றுபட்டு முரண்பாடுகளை நீக்கி செயற்பட வேண்டும். தேர்தல் காலம் முடிந்த பின்னர் சமூகத்தினைப் பற்றி சிந்திக்க வேண்டும். அவற்றின் மூலம் சுதந்திரமான சூமூகமான அபிவிருத்தியைப் பெற்றுக் கொள்ளும் சமூகமாக மாற்றிக் கொள்ள முடியும்.

இந்த நாட்டில் சிறுபான்மைக்கட்சிகள் சக்திவாய்ந்ததாக இருக்க வேண்டும். சிறுபான்மைக்கட்சிகள் பலமடைந்து செயற்படுவதன் மூலம். மத்தியில் இருக்க கூடிய பெரும்பான்மை அரசியல் கட்சிகளுக்கு ஒரு செய்தியை சொல்லி உமது உரிமைகளை பாதுகாத்துக் கொண்டு நல்ல முறையில் நாம் செயற்பட முடியுமென்று நினைக்கின்றேன் எனத் தெரிவித்தார். 

ad

ad