புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 ஆக., 2014


பாக்., பேச்சுவார்த்தை ரத்து : மவுனம் கலைத்தார் மோடி

பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தை ரத்தானது குறித்து இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருந்த பிரதமர் மோடி இன்று தனது மவுனத்தை கலைத்துள்ளார். 

இதுகுறித்து ஜப்பானிய ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்தபோது பிரதமர் மோடி,

’’இந்தியா பாகிஸ்தானுடனான அமைதியை நிலைநாட்டவே விரும்புகிறது. அந்நாட்டுடன் நட்புறவுடன் இருக்கவே விரும்புகிறது. பாகிஸ்தானுடன் தற்போது நிலவும் எந்த பிரச்சனை குறித்தும் இந்தியா ஆலோசனை நடத்த தயாராக உள்ளது. அதில் எந்த தயக்கமும் இல்லை. 

ஆனால், இவ்விவகாரத்தில் பாகிஸ்தான் அரசு காஷ்மீர் பிரிவினை வாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த முயற்சிப்பது மாயபிம்பத்தை ஏற்படுத்துவதாகும். தீவிரவாதம் மற்றும் வன்முறையிலி ருந்து விடுபட பாகிஸ்தானுடன் அர்த்தமுள்ள பேச்சுவார்த்தையே தற்போது தேவை. பேச்சுவா ர்த்தை விவகாரத்தில் பாகிஸ்தானின் செயல் ஏமாற்றம் அளிக்கிறது. 

அமைதியை நிலைநாட்ட பாகிஸ்தானுடன் நல்லுறவை மேம்படுத்தும் முயற்சிகள் தொடரும் என பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார். 

ad

ad