புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 மே, 2014


 17ம் தேதி ஜனாதிபதியிடம்
ராஜினாமா கடிதத்தை  வழங்குகிறார் மன்மோகன் சிங்

 


 மக்களவை தேர்தல் முடிவுகள் வருகிற 16ம் தேதி வெளியாகவுள்ளன. அத்துடன் பிரதமர் மன்மோகன் சிங்கின் பதவிக்காலமும் முடிவிற்கு வருகிறது.
சுவிசில் திறக்கப்படும் சார்லி சாப்ளின் நினைவகம்

சுவிசில் உலகப்புகழ் பெற்ற நகைச்சுவையாளரான சார்லி சாப்ளின் நினைவகத்தை கட்ட அவரது குடும்பத்தினர் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
இந்தியர்கள் குறித்த தகவல்களை, கறுப்பு பண விவகாரத்தில் சர்வதேச ஒப்பந்த விதிகளை மீறி தர முடியாது என்று சுவிஸ் அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இந்தியாவில் வரி ஏய்ப்பு செய்து ஏராளமான இந்தியர்கள் ரூ.70 லட்சம் கோடி வரை சுவிஸ் உள்ளிட்ட வெளிநாட்டு வங்கிகளில் கறுப்பு பணத்தை பதுக்கி இருப்பதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் இருந்து வருகின்றன.
தமிழின அழிப்பு நாள் நிகழ்வுக்கு வலுச்சேர்க்குமாறு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அறைகூவல் 
பிரித்தானியாவில் நடைபெற இருக்கும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 5ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுக்கு பிரித்தானியா வாழ் தமிழ் மக்களை கலந்து கொண்டு இந்த தமிழின
கொன்சலிற்றாவுடன் தொடர்பில்லை; பெற்றோர் கூறுவது மனவருத்தமாக உள்ளது என்கிறார் நிக்சன் பாதர் 
மறைக்கல்வி ஆசிரியர் என்ற ரீதியிலேயே கொன்சலிற்றாவுக்கும் எனக்கும் இடையில் தொடர்புகள் இருந்ததே தவிர பெற்றோர் கூறுவது போல எந்தத்தொடர்பும் இல்லை. இவர்களின்
கொன்சலிற்றா கெட்டுப்போகவில்லை ; கூறுகிறது மருத்துவ அறிக்கை 
news
குருநகர் பெரியகோயிலுக்கு பின்புறமாக உள்ள கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட ஜெரோம் கொன்சலிற்றாவின் மருத்துவ அறிக்கை இன்று நீதிமன்றத்தில் பொலிஸாரினால் சமர்ப்பிக்கப்பட்டது. 
பாஸ்போட் தொலைந்ததால் கனடாவில் இருந்து இலங்கை பெண் நாடு கடத்தல் !
ஜனீனா என்னும் 29 வயதுப் பெண்ணை கனேடிய குடிவரவு அதிகாரிகள் இலங்கைக்கு நாடுகடத்த உள்ளார்கள்.. ஜனீனா தனது 15 வயதுமுதல் கனடாவில் வசித்து வருகிறார். கடந்த 14 வருடங்களாவ அவர் கனடாவில் வசித்தது மட்டுமல்ல, அவர் கனேடிய பிரஜை ஒருவரை மணம் முடித்து அவருக்கு
ஓசைபடமால் இலங்கை இளைஞர் மாநாட்டிற்கு சென்ற ஈழத் தமிழர்கள் சிலர் !
இலங்கையில் உலக இளைஞர் மாநாடு என்று ஒன்றை மகிந்தரின் மகன் நமால் ராஜபக்ஷ நடத்தியிருந்தார். மாநாடு கடந்த செவ்வாய்கிழமை ஆரம்பமானது. இருப்பினும் பலத்த முரன்பாடு காரணமாக நமால் இம் மாநாட்டில் கலந்துகொள்ளாது தவிர்த்து வந்துள்ளார். இதேவேளை இம்மாநாட்டில், இலங்கை அரசுக்கு எதிரான கருத்துக்களை முன்வைக்க கூடாது என்று, இலங்கை அதிகாரிகள் ஏற்கனவே தெரிவித்துள்ளார்கள். இதனையடுத்து

யாழ்ப்பாணத்தில் வெசாக் பந்தல்

கைவிடப்பட்ட நிலையில் தமிழ்நாட்டில் உள்ள இலங்கை அகதிகள் – நியுயோர்க் ரைம்ஸ் குற்றச்சாட்டு

தமிழ்நாட்டில் தஞ்சம் புகுந்துள்ள இலங்கைத் தமிழ் அகதிகள் கைவிடப்பட்ட நிலையில் உள்ளதாக, நியுயோர்க் ரைம்ஸ் நாளிதழ் குற்றம்சாட்டியுள்ளது.
இதுகுறித்து அந்த நாளிதழ்

கடற்புலிகளின் போர்ப்படகுகளைப் பார்வையிட்ட அவுஸ்ரேலிய எல்லைப் பாதுகாப்புத் தளபதி














அவுஸ்ரேலியாவின் எல்லைப் பாதுகாப்பு படையின் தளபதி, றியர் அட்மிரல் மிச்சேல் நூனன் கடந்த வாரம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

பாரதீய ஜனதா கூட்டணி 289 தொகுதிகளில் வெற்றி பெறும் கருத்துக்கணிப்பில் தகவல்

என்.டபிள்யு.எஸ் செய்தி நிறுவனம் மற்றும் சிவோட்டர் நிறுவனம் ஆகியவை இணைந்து நாட்டில் உள்ள 543 மக்களவை தொகுதிகளிலும் தேர்தலுக்கு பிந்தைய

தமிழகத்தில் அ.தி.மு.க. 31 தொகுதிகளில் வெற்றி பெறும் டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பு

டைம்ஸ் நவ் டிவி சேனல் வெளியிட்டுள்ள, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தமிழகத்தில்

தேர்தல் பணியில் பலியான அதிமுக நிர்வாகி: நிதி உதவியை பெற மறுத்த மகள்: அதிர்ச்சியான அமைச்சர்
                     
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த தில்லைவிளாகம் ஊராட்சி கழுவங்காடு கிராமத்தை சேர்ந்தவர் பொன்முடி (59). இவர் ஊராட்சி செயலாளராக இருந்து வருகிறார்.
ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு வரக்கூடிய நாள் வெகுதூரத்தில் இல்லை! கலைஞர் கடிதம்!

சொத்துக் குவிப்பு வழக்கு; ஒரு தொடர் கதை! (8) என்ற தலைப்பில் திமுக தலைவர் கலைஞர் 12.05.2014 திங்கள்கிழமை வெளியிட்டுள்ள
திருமணம் செய்ய வலியுறுத்தி காலதன் வீட்டுக்கு சென்ற பெண், காதலனின் தந்தையால் வெட்டி படுகொலை
ஈரோடு அருகே திருமணம் செய்ய வலியுறுத்தி காதலன் வீட்டிற்கு சென்ற இளம்பெண் காதலனின் தந்தையால் வெட்டி படுகொலை
ஒட்டர் அதிமுக 27 திமுக 6பாசக் 2மதிமுக 1பாமக 1 தேதிமுக  1
சீ என் என்  அதிமுக 22-28,திமுக 7-11.பாஜ  கூ 4-6
ஹெட்லைன்ஸ் டுடே  அதிமுக்க 20-24 திமுக 10-14,பாஜ  கூ 5.காங்கிரஸ் 1
டைம்ஸ் நவ் அதிமுக 31 திமுக 7 காங்கிரஸ் 1
குட்டையை குழப்பும் வாக்குக் கணிப்புகள்! 
நாடுகடத்தலை கண்டித்து இலங்கையில் பலஸ்தீனியர்கள் போராட்டம் 
தம்மை நாடுகடத்துவதை கண்டித்து பாலஸ்தீன பிரஜைகள் நால்வர் இலங்கையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஜனவரி 13ல் இலங்கை வருகிறார் போப் 
 போப் பிரான்ஸிஸ் அடுத்த வருடம் ஜனவரி 13 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொங்கோவில் கால்பந்தாட்ட மைதானத்தில் சன நெரிசல் 15 பேர் பலி 
கொங்கோவில் கால்பந்தாட்ட மைதானத்தில்  இடம்பெற்ற சன நெரிசலில் 15 பேர் பலியாகியுள்ளதாக அன்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
நைஜீரியாவில் கடத்தப்பட்ட மாணவிகளைக் காட்டும் புதிய வீடியோ வெளியாகியதால் பரபரப்பு 
news
நைஜீரியாவில் கடத்தப்பட்ட நூற்றுக்கும் அதிகமான பெண்பிள்ளைகளைக்காட்டும் புதிய வீடியோ ஒன்றை அந்நாட்டின் இஸ்லாமியவாத ஆயுதக்குழுவான
கூட்டமைப்புக்கு அடிப்பணிவதா?- குணதாச அமரசேகர 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அடிப்பணிந்த ஒருவரை வடக்கு ஆளுநராக நியமிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது  என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர்
ஊதிப்பெருப்பிப்பது பெற்றோரும் ஊடகங்களுமே ;குயின்ரன் பாதர் சாடல் 
கொன்சலிற்றா மறை ஆசிரியர் என்பதைத்தவிர வேறு எந்தத் தொடர்பும் எனக்கு இல்லை என கொன்சலிற்றாவின் சாவுடன் தொடர்பு என சந்தேகிக்கப்படும் பெரியகோயில் பாதிரியாரான
பிரிட்டன் பிரஜை குராம் ஷெய்க் படுகொலை தொடர்பிலான வழக்கு விசாரணை இன்று கொழும்பு உயர் நீதிமன்றில் நடைபெற்றது.
வழக்கு விசாரணைகளில் கராபிட்டி போதனா வைத்தியசாலையின் வைத்தியர் தம்மி லுவிஸ்ஹேவா சாட்சியமளித்திருந்தார்.

பாரியளவிலான சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
20 முதல் 30 லட்ச ரூபா வரையில் அறவீடு செய்து நேபாளத்தின் ஊடாக ஐரோப்பிய, ஸ்கண்டினேவிய நாடுகளுக்கு நபர்களை சட்டவிரோதமாக அனுப்பி வைக்கும் வர்த்தகம் தொடர்பிலான
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தினை உணர்வுபூர்வமாக நா.த.அரசாங்கத்தின் அரசவை தொடக்கி வைத்தது
முள்ளிவாய்க்கால் பெருவலியின் ஐந்தாம் ஆண்டினை நினைவேந்தி புலம்பெயர் தேசமெங்கும் மே-18 தமிழீழத் தேசிய துக்க நாளினையொட்டிய நினைவேந்தல் வாரம் உணர்வுபூர்வமாக தொடங்கியது.


ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பேலியகொட நகர சபை உறுப்பினர் ஷமில சந்தருவான் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
அவர் தனது காரில் பயணித்து கொண்டிருந்த போது, களனி டயர் சந்திப் பகுதியில் வைத்து இனந்தெரியாத துப்பாக்கிதாரி அவரை சுட்டுக்கொன்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஆசிரியரை முழந்தாளிட வைத்த மாகாண சபை உறுப்பினருக்கு 7 வருட சிறைத் தண்டனை 
 ஆசிரியை  ஒருவரை முழந்தாளிட வைத்த வடமேல் மாகாண   சபையின் முன்னாள் உறுப்பினர் ஆனந்த சரத் குமாரவுக்கு 7 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 2 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது


சுகயீன விடுமுறைப் போராட்டத்தில் குடும்பநல சுகாதார உத்தியோகத்தர்கள் 
 அரச குடும்பநல சுகாதார உத்தியோகத்தர் சங்கம் சுகவீன விடுமுறைப் போராட்டத்தை மேற்கொண்டு இன்று பணியிலிருந்து விலகியிருப்பதற்கு  தீர்மானித்துள்ளது.
 மீனவர்கள் பிரச்னைக்குத் தீர்வு காண்பதற்காக தமிழக-இலங்கை மீனவர்களிடையே இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை இலங்கை தலைநகர் கொழும்பில் இன்று நடைபெற்று வருகிறது.
இதற்காக தமிழக மீனவர்கள், மற்றும் அதிகாரிகள் சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று அதிகாலை கொழும்பு சென்றனர்.


அஸ்ஸாம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை மாணவியை பாலியல் பலாத்காரம் செய்யமுயன்று,  கொலை செய்த  வார்டு உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அஸ்ஸாம் மாநிலம், திப்ருகாரில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரியில் முதுநிலை மருத்துவம் முதல் ஆண்டு படித்து வந்தவர் சரிதா. இவர்

தேர்தலுக்கு பிந்தைய நிலவரம் : வாக்கு கணிப்புகளை இன்று மாலைக்குப் பிறகு வெளியிடலாம்

தேர்தலுக்கு பிந்தைய வாக்குக் கணிப்பை திங்கள்கிழமை (மே 12) மாலை 6.30 மணிக்குப் பிறகு வெளியிட லாம் என்று தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.


2ஜி வழக்கு:  இன்றுடன் வாக்குமூலம் பெறுவது முடிகிறது

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேடு தொடர்பான வழக்கு விசாரணை டெல்லியில் உள்ள சி.பி.ஐ. கோர்ட்டில் நடந்து வருகிறது. தற்போது குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டு வருகிறது.

அரவிந்தர் ஆசிரமத்தைவிட்டு வெளியேற5 சகோதரிகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
புதுவை அரவிந்தர் ஆசிரமத்தில் ஜெயஸ்ரீ பிரசாத், அருணஸ்ரீ பிரசாத், ராஜ்யஸ்ரீ பிரசாத், நிவேதிதா பிரசாத், ஹேமலதா பிரசாத் ஆகியோர் தங்கியிருந்தனர். கடந்த 2002-ஆம் ஆண்டு

தமிழ் மக்கள் விடயத்தில் நியாயமாக நடக்காவிடில் அரசில் இருப்பது குறித்து மறுபரிசீலனை செய்வேன்: டக்ளஸ்
தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் நாடாளுமன்றத் தெரிவுக் குழுவின் மூலம் தீர்வு காணும் விடயத்தில் அரசாங்கம் நியாயமாக நடந்துகொள்ளத் தவறினால் தான் தொடர்ந்தும் அரசியலில் இருப்பது

மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்லாயிரக்கணக்கான போராளிகளை இழந்துள்ளோம்: விநாயகமூர்த்தி முரளிதரன்
கடந்த கால யுத்த வடுக்கள் உண்மையில் மறக்கக்கூடியவை அல்ல என்பதுடன், அதை தங்களால் நினைத்துப் பார்க்காமலிருக்கவும் முடியாதென மீள்குடியேற்றப் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலில் கூட்டணிகள் மாறலாம் - இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அதிகாரம் மாற்றம் ஏற்படலாம் என்பதால், சிலர் பேதங்களை மறந்து வேறு கூட்டணிகளை ஏற்படுத்திக் கொள்ளும் வாய்ப்பிருப்பதாக இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் தவிசாளர் ராஜா கொலுரே தெரிவித்துள்ளார்.

பெயர்ப்பலகையில் தமிழ் மொழியும் உள்ளடக்கப்பட வேண்டும்!- அமைச்சர் வாசுதேவ உத்தரவு
பெயர்ப் பலகையில் தமிழ் மொழியும் உள்ளடக்கப்பட வேண்டுமென வீதி அபிவிருத்தி அதிகாரசபை உத்தியோகத்தர்களுக்கு தேசிய மொழிகள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார உத்தரவு

ad

ad