புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 நவ., 2012

13ஆவது திருத்தத்தை இல்லாதொழிக்க ஒரு போதும் இடமளிக்க மாட்டோம்: ராஜித்த சபையில் சூளுரை
தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பாராளுமன்றத் தெரிவுக் குழுவுக்கு வரவேண்டும். அர்த்தமுள்ள அதிகாரப் பரவலாக்கலை உறுதி செய்ய வேண்டுமென அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். 13 ஆவது திருத்தத்தை
ரத்து செய்வதற்கு நாம் ஒரு போதும் இடமளிக்கப் போவதில்லை. என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற வரவு செலவு திட்டம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன இதனைத் தெரிவித்தார்.

சபையில் அமைச்சர் தொடர்ந்து உரையாற்றகையில்,
பதின்மூன்றாவது திருத்தம் 1987 இல் அவசரமாக கொண்டு வரப்பட்டது. எனவே மாற்றங்கள் தேவை .

ஆனால் 13 ஆவது திருத்தத்தை ரத்து செய்வதற்கு இடமளிக்க மாட்டோம்.

மாகாண சபை முறைமை இலங்கைக்கு மேலதிகமான வருமானம் கிடைக்கின்றது.

அவ்வாறானதோர் நிலையில் எதற்காக ஜனாதிபதி மாகாண சபை முறைமையை இரத்த செய்யப் போகின்றார்.

அன்று பதின்மூன்றாவது திருத்தம் கொண்டுவரப்பட்டு மாகாண சபை முறைமை அறிமுகப்படுத்தப்பட்ட போது அர்ப்பணிப்புடன் இதற்காக போராடினோம்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற தெரிவுக் குழுவுக்கு வர வேண்டும் ஜனாதிபதியை பலப்படுத்த வேண்டும்.

அதிகாரரப் பரவலாக்கலை நாங்கள் ஆதரிக்கின்றோம். அதற்கு ஒத்துழைப்பு வாழங்கி அரசாங்கத்திற்குள் வாசுதேவ நாணயக்கார திஸ்ஸ விதாரணபோன்ற பலர் உள்ளனர்.

இதேபோன்று அதிகார பரவலாக்கலை ஆதரிக்கும் தமிழ் முஸ்லிம் எம்பிக்கள் அமைச்சர் பலர் அரசாங்கத்திற்குள் இருக்கின்றனர்.

எனவே கூட்டமைப்பு பாராளுமன்ற தெரிவுக் குழுவிற்கு வர வேண்டும். நாங்கள் அனைவரும் கலந்து பேசி தீர்வுகளை காண்போம். அதிகாரப் பரவலாக்களை அர்த்தமுள்ளதாக்குவோம்.

1987 இல் மாகாணசபை முறைமை அவசர அவசரமாக கொண்டவரப்பட்டது.

எனவே தான் அதிகாரப் பரவலாக்கலை அர்த்தமுள்ளதாக்கும் விதத்திலான மாற்றங்கள் தேவை. ஆனால் 13 ஆவது திருத்தத்தை இரத்து செய்வதற்கு இடமளிக்கமாட்டோம் என்றும் அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

ad

ad