புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 நவ., 2012




புலம்பெயர் மக்களால் சுற்றுச்சூழல் பாதிப்பு
சுவிட்சர்லாந்தில் பெருகிவரும் புலம்பெயர்ந்தோரால் மக்கள் தொகை அதிகமாகி வருகின்றது.
அதனால் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுவதாக ecopop (Ecology & Population) என்ற சுற்றுச்சூழல் அமைப்பு மக்கிடையே விழிப்புணர்வுப் பிரச்சாரம் செய்து கையெழுத்து வேட்டை நடத்தி வருகிறது.
பொதுவாக்கெடுப்பு நடத்த 100,000 கையெழுத்துகளே போதும் என்ற நிலையில் இதுவரை 120,700 பேரிடம் கையெழுத்து பெற்றுள்ளது.
இந்த அமைப்பு நிர்வாகம், சட்டரீதியான தடைகளை விளக்கினால் 2015ம் ஆண்டில் அரசு பொதுவாக்கெடுப்பு நிகழ்த்தும். இச்சுற்றுச்சூழல் அமைப்பு புலம்பெயர் மக்களால், நகரங்களில் மக்கள் தொகை பெருகுகிறது. இதனால் விவசாய நிலங்களும் அதிகமாவதுடன் இயற்கை அழிக்கப்படுகிறது. மேலும் பசும்புல்வெளிகள் பாழாகின்றன. மலைப்பகுதியில் கட்டப்படும் வீடுகளால் இயற்கை சமனிலை அச்சுறுத்தலுக்கு உள்ளாகிறது என விளக்கியது.
மேலும் 1968ம் ஆண்டில் அமெரிக்க உயிரியல் துறை அறிஞர் பால் எர்லிக் எழுதி வெளியிட்ட "மக்கள்தொகை வெடிகுண்டு" என்ற நூலை அடிப்படையாகக் கொண்டு ஈக்கோபாப் அமைப்பு அரசுக்கு மக்கள் தொகைப் பெருக்கத்தின் அபாயங்களை விளக்கியது. 0.2 சதவீதம் புலம்பெயர்வோருக்கு மட்டுமே ஆண்டொன்றுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று ஈக்கோபாப் அரசை வலியுறுத்தியது.
சுவிட்சர்லாந்து தற்போது பூமி கிரகத்திலேயே அதிக மக்கள்தொகை உள்ள இடமாக உள்ளது. சுவிஸ்ஸின் நடுப்பகுதியான மிடில்லாண்டில் ஒரு சதுர கிலோமீற்றருக்கு 480 பேர் குடியிருக்கின்றனர், என்பதை எடுத்துக்கூறிய ஈக்கோபாப்பின் தலைவரான ஆண்டிரியாஸ் தோமென் நீண்டநாளைக்கு இந்த மக்கள் தொகைப் பெருக்கம் உதவாது, இதனால் ஆபத்துகள் உருவாக்கும்.
இயற்கை வளங்களை நம்மால் பாதுகாக்க இயலாமல் போய்விடும். புலம்பெயர்வில் கடுமையான சட்டம் கொண்டுவந்தால் மட்டுமே மக்கள் தொகையை கட்டுப்படுத்த முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

ad

ad