புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 நவ., 2012


நடிகை நந்திதா தாஸுக்கு பிரான்ஸின் உயரிய விருது அறிவிப்பு
நந்திதா தாஸுக்கு பிரான்ஸ் அரசு செவாலியே விருது அறிவித்து 
இயக்குனர் தங்கர்பச்சான் இயக்கத்தில் 

இயக்குனர் தங்கர்பச்சான் இயக்கத்தில் வெளிவந்த ‘அழகி’ படத்தில் நடித்ததன் முலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் பாலிவுட் நடிகை நந்திதா தாஸ். தொடர்ந்து மணிரத்னத்தின் ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ படத்தில் நடித்ததன் மூலம் மேலும் பிரபலமானார். 


இவர் தற்போது சீனுராமசாமி இயக்கும் ‘நீர்ப்பறவை’ படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் நந்திதா தாஸுக்கு பிரான்ஸ் அரசு செவாலியே விருது அறிவித்து கௌரவித்துள்ளது. 

இதற்கிடையில், நந்திதா தாஸ் நடித்திருக்கும் ‘நீர்ப்பறவை’ படத்துக்கு கேளிக்கை வரிவிலக்கு தரவில்லை என்று அப்படத்தின் இயக்குனர் சீனுராமசாமி ஒருநாள் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்து இருந்ததும், இப்படத்தில் சர்ச்சைக்குரிய பாடல் இடம்பெற்றுள்ளதாகவும், அந்த பாடலை எழுதிய கவிஞர் வைரமுத்துவை கைது செய்ய வேண்டும் என்று சில அமைப்புகள் போராட்டம் நடத்தியதும் குறிப்பிடத்தக்கது.

ad

ad