புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 நவ., 2012

மோதல் முடிந்த பின்னர் சிறைக் கூடத்துக்கு வெளியில் அழைத்து வரப்பட்டு இராணுவ கொமோண்டோக்களால் கொல்லப்பட்டுள்ளதாக அவர்களின் உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் வெள்ளிக்கிழமை நடந்த ஆயுத மோதல்களில் கொல்லப்பட்டதாக அதிகாரிகளால் அறிவிக்கப்பட்ட கைதிகளில் சிலர், மோதல் முடிந்த பின்னர் சிறைக் கூடத்துக்கு வெளியில் அழைத்து வரப்பட்டு இராணுவ கொமோண்டோக்களால் கொல்லப்பட்டுள்ளதாக
அவர்களின் உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
மோதல்களில் சம்மந்தப்படாது சிறைக்கூடங்களுக்குள் ஒதுங்கியிருந்த சில கைதிகள் காலை 4.00 மணிக்குப் பின்னர் வெளியில் வாக்குமூலம் பெறுவதற்காக என்ற பெயரில்  கூட்டிவரப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக கொல்லப்பட்ட கைதி ஒருவரின் தாயார் ஒருவர் குற்றஞ்சாட்டுகிறார்.

சிறைச்சாலை கலவரம் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டு விட்டதாக அறிவிக்கப்பட்ட இரவு 11.30 மணிக்குப் பின்னரும் தமது மகன் தம்மோடு தொலைபேசியில் உரையாடியதாகவும், அவர் இருந்த சிறைக்கூடம் பாதுகாப்பாக மூடப்பட்டுள்ளதால் தமக்கு ஆபத்து எதுவும் இல்லை என்று அவர் கூறியதாகவும் அந்த தாய் தெரிவித்தார்.

தனது மகனுடன் அதே சிறைக்கூடத்தில் இருந்த மற்றக் கைதிகளும் தமது குடும்பங்களுடன் அதிகாலை 4 மணிவரை தொடர்பில் இருந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

சிறைக்கூடத்துக்குள் பாதுகாப்பாக இருந்த கைதிகள் அதிகாலை 4 மணியளவில் வாக்குமூலம் அளிப்பதற்காகச் சென்றுள்ளதாகவும் அதன்பின்னர் காலை துப்பாக்கிச் சூட்டுக்காயங்களுடனேயே அவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டதாகவும் அந்த தாய் தெரிவித்தார்.

ad

ad