12 நவ., 2012

கனேடிய மண்ணில் சுப்பையா வடிவேலுக்கு ``சிவநெறிச்செல்வர் `` பட்டமளிப்பு 


(படத்தில் வடிவேலுவின் இடப்பக்கம் சோம-சட்சிதானந்தம் ,வலது புறம் உயர்திரு .விஷய பாஸ்கர குருக்கள்/ஐயாமணி  மற்றும் துணைவியார்) 
சுவிட்சர்லாந்தில் பொது நல,சமூக சேவை,ஆன்மீகப்பணி ,தாயக பங்களிப்பு என் பல்வேறு துறைகளில் தன்னை ஈடுபடுத்தி வரும் புங்குடுதீவை சேர்ந்த சுவி தூண் மாநகரில் வசித்து வரும் திரு.சுப்பையா வடிவேலு அவர்களுக்கு  கனேடிய சைவத் தமிழ் மக்களால்  ``சிவநெறிச்செல்வர்``என்ற கௌரவ பட்டம் வழங்கி பாராட்டப் பட்டார் .புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின்
ஸ்தாபகர்களில் ஒருவரும் மத்திய குழு உறுப்பினருமான இவர்,இருபது வருடங்களுக்கும் மேலாக தாயகப் பணியிலும் முற்றுமுழுதாகத் தன்னை ஈடுபடுத்தி உழைத்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது .திரு சு.வடிவேலு அவர்கள் ஆன்மீக துறையில் நாட்டம் கொண்டு ஒபெர்லாந்து தமிழரின் சைவ நெறியை மேம்படுத்தும் முகமாக தூண் நகரில் ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயத்தை அமைத்து நிர்வகித்து வருபவர் . சிவநெறிச்செல்வர் வடிவேலுவை நாமும் உளமார வாழ்த்தி மனமுறுவோமாக .
வாழ்த்து தெரிவிக்க ;0041 33 336 54 52 / 0041 79 332 80 37