12 நவ., 2012

மாகாண சபை முறையை இரத்துச் செய்யக்கோரி தே.சு.முன்னணி நாளை வழக்குத் தாக்கல்
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் கீழ் ஸ்தாபிக்கப்பட்ட மாகாணசபை முறையை ரத்துச் செய்யும்படி கோரி அமைச்சர் விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணி நாளை 12 ஆம் திகதி உயர் நீதிமன்றத்தில் வழக்கொன்றை தாக்கல் செய்யவுள்ளது. 
 

அரசியலமைப்பை மீறிச் சென்று மாகாணசபை முறை ஸ்தாபிக்கப்பட்டுள்ளதால் அதற்கு எதிராக வழக்குத் தொடரவுள்ளதாக அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பில் 13 ஆவது திருத்தத்தின் மூலம் நாட்டைப் பிரிக்க அச்சுறுத்தல் காணப்படுவதாக ஜாதிக ஹெல உருமயவும் தெரிவிக்கின்றது.

மாகாண சபை முறையை ஒழிக்கும்படி கோரும் வழக்கை சட்டத்தரணிகளான எஸ்.எல். குணசேகர கோமன் தயாசிரி கபில கமகே ஆகியோர் நாளை தாக்கல் செய்யவுள்ளனர்.