புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 நவ., 2012


ஈழத் தமிழரின் இன்னல்களை ஐ.நா.விடம் சிறப்பாக விளக்கியுள்ளோம்!- மு.க. ஸ்டாலின்
ஈழத் தமிழரின் இன்னல்கள் மற்றும் வாழ்க்கைத் தரம் குறித்து ஐ.நா.விடமும், ஐ.நா. மனித உரிமை ஆணையத்திடமும் சிறப்பாக விளக்கியுளள்ளோம் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
ஐ.நா. சபையிடமும், ஐ.நா. மனிதஉரிமை ஆணையத்திடமும் டெசோ மாநாட்டுத் தீர்மானங்களை அளித்து விட்டு இன்று சென்னை திரும்பினார் ஸ்டாலின்.
விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
சென்னையில் நடந்த டெசோ மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஐ.நா.சபையில் உள்ள மனித உரிமைகள் கழகத்தில் வழங்குவதற்காக நானும், டி.ஆர்.பாலுவும் சென்றோம்.
ஐ.நா.சபை மனித உரிமை கழகத்தில் டெசோ மாநாட்டு தீர்மானங்களை வழங்கி இலங்கை தமிழர்களின் இன்னல்கள் பற்றி எடுத்து கூறினோம்.
பின்னர் லண்டனில் நடைபெற்ற உலகத் தமிழர்கள் பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொண்டு இலங்கைத் தமிழர்களின் நிலைமைகள் பற்றி எடுத்துக் கூறினோம்.
இந்த பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பிய எங்களுக்கு சிறப்பான வரவேற்பு அளித்த தி.மு.க. தலைவர், பொதுச் செயலாளர் மற்றும் கழக அமைப்பு நிர்வாகிகள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுக்கு எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் ஸ்டாலின்.

ad

ad