புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 நவ., 2012

வெலிக்கடை சிறையில் உயிரிழந்த கைதிகள் 18 பேரின் சடலங்கள் கையளிப்பு தப்பியோடியவர்கள் குறித்து இன்று அறிக்கை
கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் கைதிகளுக்கும் படையினருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் பலியான 18 கைதிகளின் சடலங்கள் நேற்று உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. மேலும் காயமடைந்த 20கைதிகள் 3அதிரடி படை வீரர்கள் மற்றும்
4 இராணுவ வீரர்கள் வைத்திய சாலையில் சிகிச்சை பெறுகின்றனர். 
 

தப்பியோடிய கைதிகள் தொடர்பில் இன்று முழுமையான அறிவிப்பு வெளியிடப்படவுள்ளதுடன் அவர்களை கைதுச் செய்வதற்கான விசேட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது குறித்து பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரசாத் ஜயக்கொடி கூறுகையில்:

கடந்த வெள்ளிக் கிழமை கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் சோதனையிடச் சென்ற விசேட அதிரடிப்படையினருக்கும் கைதிகளுக்கும் இடையில் ஏற்பட்ட முறுகள் நிலையை அடுத்து 27 கைதிகள் உயிரிழந்துள்ளனர். இவர்களுள் 18 பேரின் சடலங்கள் அடையாளம் காணப்பட்டு உறவினர்களிடம் நேற்று கையளிக்கப்பட்டுள்ளன. தற்போது நிலைமை சுமூகமாக காணப்பட்டாலும் இராணுவம் மற்றும் பொலிசார் விசேட பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சில கைதிகள் தப்பியோடியதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அவர்களை தேடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமை ஆறு கைதிகள் சரணடைந்துள்ளனர். துப்பாக்கிகள் குறித்து கூடிய அவதானமாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. களஞ்சிய சாலைகளிலிருந்து கைதிகளால் எடுக்கப்பட்ட துப்பாக்கிகள் பல மீட்கப்பட்ட போதிலும் அது குறித்து முழுமையான அறிக்கை இன்னும் கிடைக்கப் பெறவில்லை எனக் கூறினார்.

ad

ad