21 மே, 2013

ராமதாசை சந்திக்க மருத்துவமனைக்கு வருவதை தவிர்க்கவும்: கட்சியினருக்கு பாமக வேண்டுகோள்
பாமக தலைமை நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அதிமுக அரசால் அரசியல் பழி வாங்கும் நோக்குடன் கைது செய்யப்பட்டு
திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்ட பாமக நிறுவனர் ராமதாஸ், 12 நாள் சிறைவாசத்திற்குப் பிறகு கடந்த மே 11ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டார். அன்று அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அன்றிறவு சென்னை அப்பல்லோ மருத்தவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

இரண்டு நாள் தொடர் மருத்துவ ஆய்வுகளுக்குப் பிறகு கடந்த 14ஆம் தேதி ராமதாசுக்கு ஆஞ்சியோகிராம் சோதனை செய்த மருத்துவர்கள், அவருக்கு அவசர இதய பை பாஸ் அறுவை சிகிச்சை செய்ய தீர்மானித்தனர். அதன்படி 20.05.2013 திங்கள்கிழமை அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது. 
அறுவை சிகிச்சைக்குப் பின்னர் ராமதாஸ் தீவிர கவனிப்புப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு உடல் நலம் தேறி வருகிறார். அவரது உடல்நிலை நன்றாக உள்ளது. அவருக்கு ஓய்வு தேவைப்படுவதால் பாமகவினரும், நண்பர்களும் அவரை சந்திக்க மருத்துவமனைக்கு வருவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name *:
Email Id *:
Left:  Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500):
 
[X]