புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 மே, 2013

               ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ராயல்சும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதிய போட்டியை ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ஸ்டேடியத்திலும், நக்கீரன் கோடிக்கணக்கான ரசிகர்கள் தொலைக்காட்சி முன்பாகவும் நகத்தை கடித்துக் கொண்டு டென்ஷனாக பார்த்தனர். இறுதியில் 14 ரன்கள் வித்தியாசத்தில் ராகுல் டிராவிட் தலைமையி லான ராஜஸ்தான்... சச்சினின் மும்பை இந்தியன்ஸ் அணியிடம் தோற்றுப் போனது. இந்த தோல்வியினால் பாயிண்ட்ஸ் டேபிளில் மூன்றாவது இடத்துக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி போனதற்குக் காரணம் சூதாட்டம்தான் என டெல்லி போலீஸ் அறிவித்த தோடு, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியைச் சேர்ந்த மூன்று வீரர்களையும் கைது செய்து ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

"இந்தப் போட்டியில் சூதாட்டம் நடந்ததற்கான ஆதாரம் உள்ளது' என அறிவித்த டெல்லி போலீஸ் கமிஷனர் நீரஜ்குமார் "போட்டியில் 9-வது ஓவரை வீசும்போதுதான் சூதாட்டம் நடை பெற்றது' என அதற்கான வீடியோவை யும் காட்டினார். அந்த ஓவரை வீசியவர் அங்கீத் சவான் என்கிற சுழற்பந்து வீச்சாளர், அந்த குறிப்பிட்ட ஓவரை வீசுவதற்கு முன்பு பாக்கெட்டில் இருந்து ஒரு கைப்பட்டையை மிக மிக மெதுவாக எடுக்கிறார். பின்பு அதை தனது இடது கையில் நுழைக் கிறார். பின்பு அந்த கைப்பட்டையை டி.வி. காமிராக்கள் கண்களில் படும் படி ஆட்டுகிறார். அடுத்து சில வினாடிகள் ஃபீல்டிங் செட் செய்கிறார். 

அதன்பிறகு முதல் பந்தை மிக எளிதாக தூக்கி அடிக்கும் வகையில் போடு கிறார். அது சிக்சருக்கு பறக்கிறது. அடுத்த பந்தையும் முதல் பந்தை போட்டது போல எளிதாக போடுகிறார். அதுவும் எல்லைக் கோட்டை தாண்ட முயற்சிக்கிறது. அதை ஒரு வீரர் கஷ்டப்பட்டு தடுத்து இரண்டு ரன்கள் மட்டுமே பெறுமளவிற்கு விரைவாக ஃபீல்டிங் செய்கிறார். தனது முயற்சியில் சற்றும் சளைக்காத அங்கீத் சவான் மூன்றாவது பந்தையும் முதலிரண்டு பந்துகளை போட்டது போல பழம் நழுவி பாலில் விழுவது மாதிரி வீசுகிறார். அந்த பந்தும் முதல் பந்தை போல சிக்சருக்கு பறக்கிறது. அடுத்து வீசிய மூன்று பந்துகளை முதல் மூன்று பந்துகளை போல் இல்லாமல் மிக நேர்த்தியாக வீசுகிறார். அந்த பந்துகளை அடிக்க முடியாமல் பேட்ஸ்மேன்கள் தடுப்பாட்டம் ஆடி மூன்று ஒரு ரன்களை மட்டுமே எடுக்கின்றனர்.

சாதாரணமாக கிரிக்கெட் பார்ப்பவர்களுக்கு இதுபோல பந்துகளில் சிக்சர் அடிப்பதெல்லாம் கிரிக்கெட்டில் சாதாரணம் என்று சொல்வார்கள். ஓவர் போடுவதற்கு முன்பு அங்கீத் சவான் கைப்பட்டை அணிந்து டி.வி. காமிராக்களுக்கு காட்டிவிட்டு, ஃபீல்டிங் செட் செய்ய நேரம் எடுத்துக் கொண்டது கிரிக்கெட் சூதாட்டக் காரர்களுக்கு கொடுத்த சிக்னல். அங்கீத் சவானின் இந்த செயல் உலகம் முழுவதும் உள்ள சூதாட்டக்காரர்களுக்கு "இந்த ஓவரில் பதினான்கு ரன்களுக்கு மேல் ராஜஸ்தான் ராயல்ஸ் வழங்கும்... எவ்வளவு பெட்' என பெட் கட்டும் சூதாட்டத்தைத் தொடங்கி வைக்கும். 

இது விளையாட்டு வீரர்களும் சூதாட் டக்காரர்களும் இணைந்து நடத்தும் நாடகம் என தெரியாமல் "அங்கீத் சவான் நல்ல பந்து வீச்சாளர். இந்த ஓவருக்கு முந்தைய ஓவரில் வெறும் மூன்று ரன்கள் மட்டும் வழங்கிய அவரது பந்தில் பதினான்கு ரன்கள் அடிக்க முடியுமா?' என கோடீசுவர ரசிகர்கள் பெட் கட்டுவார்கள். கோடிக்கணக்கான ரூபாயை பெட்டிங் வியாபாரிகள் அள்ளிக்கொண்டு போவார்கள். இதற்காக அங்கீத் சவான் பெற்ற தொகை 60 லட்சம் ரூபாய்.

இது ஸ்பாட் ஃபிக்சிங் எனப் படும் சூதாட்டம். இதில் அங்கீத் சவான் மட்டும் ஈடுபடவில்லை. இந்தியாவுக்காக 27 டெஸ்ட் போட்டி கள், 57 ஒருநாள் போட்டி களில் விளையாடிய கேரள வீரர் ஸ்ரீசந்த், எப்பொழுதும் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தும் அஜீத் சந்த்லியா ஆகிய மூவரும் ஈடுபட்டிருக்கிறார்கள்.     

கடந்த மே 9-ம் தேதி பஞ்சாப் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் டி.வி. கேமராக்களில் தெரியும்படி கர்ச்சீப்பை பேண்ட்டின் இடுப்புப் பகுதியில் வைத்து ஒரு ஓவரில் 15 ரன்கள் விட்டுக்கொடுத்த ஸ்ரீசந்த் அதற்காக பெற்ற தொகை 40 லட்ச ரூபாய்.

அதேபோல், புனே வாரியர்சுக்கு எதிராக மே மாதம் 5-ம் தேதி நடந்த போட்டியில் அஜீத் சந்த்லியா 14 ரன்கள் விட்டுக் கொடுக்க பேசிய தொகை 20 லட்ச ரூபாய். சிக்னல் காட்டாததால் சூதாட்டக்காரர்கள் பணத்தைத் தர மறுத்து விட் டார்கள் என அதி ரடியாக விளக்கினார் கமிஷனர்.

இந்த சூதாட்டத்தை போலீசார் எப்படி கண்டுபிடித் தார்கள் என டெல்லி போலீஸ் வட்டாரத்தில் விசாரித்தோம். "ஒரு தற்கொலைதான் இந்த சூதாட்டத்தை பற்றிய கருவை கொடுத்தது' என்கிறார்கள். கடந்த ஏப்ரல் மாதம், டெல்லி போலீஸில் டெலிபோன்களை டேப் செய்வதில் வல்லுந ரான பத்ரிஸ்தத் என்ற இன்ஸ்பெக்டர் தற் கொலை செய்துகொண்டார். அவரது அலுவலக கருவிகளில் தாவூத் இப்ராகிமுடன் தொடர்புடைய கிரிக்கெட் சூதாட்ட தரகர்கள் பத்து பேர் மற்றும் ஸ்ரீசந்தின் உறவினர் ஜுஜு ஜனார்த்தன ஐயர் ஆகி யோரின் எண்கள் இருந்தன. மும்பை, கொச்சி, கராச்சி, துபாய் போன்ற இடங்களிலிருந்து இந்த எண்களுக்கு போன் கால்கள் வந்து கொண்டிருந்தன. தொடர்ந்து நாங்கள் கண்காணித்தோம். சூதாட்டக் கும்பல் கையும் களவுமாக சிக்கியது என விரிவாக சொன்னார்கள்.

""ஒரு சில முட்டைகள் அழுகிய முட்டைகள் என்பதால் அனைத்து முட்டைகளும் அழுகியதாகி விடுமா?'' என சூதாட்ட சம்பவத்தை பற்றி கருத்து சொல்கிறார் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் சீனிவாசன். பாலில் ஒரு துளி விஷம் கலந்தாலும் ஒட்டுமொத்த பாலும் கெட்டுப் போய்விடும். எனவே ஐ.பி.எல். போட்டிகளை தடை செய்ய வேண்டும் என இந்தியா முழுவதும் கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்ப்பாட்டம் நடத்திக் கொண்டி ருக்கிறார்கள்.

               ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ராயல்சும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதிய போட்டியை ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ஸ்டேடியத்திலும், கோடிக்கணக்கான ரசிகர்கள் தொலைக்காட்சி முன்பாகவும் நகத்தை கடித்துக் கொண்டு டென்ஷனாக பார்த்தனர். இறுதியில் 14 ரன்கள் வித்தியாசத்தில் ராகுல் டிராவிட் தலைமையி லான ராஜஸ்தான்... சச்சினின் மும்பை இந்தியன்ஸ் அணியிடம் தோற்றுப் போனது. இந்த தோல்வியினால் பாயிண்ட்ஸ் டேபிளில் மூன்றாவது இடத்துக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி போனதற்குக் காரணம் சூதாட்டம்தான் என டெல்லி போலீஸ் அறிவித்த தோடு, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியைச் சேர்ந்த மூன்று வீரர்களையும் கைது செய்து ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

"இந்தப் போட்டியில் சூதாட்டம் நடந்ததற்கான ஆதாரம் உள்ளது' என அறிவித்த டெல்லி போலீஸ் கமிஷனர் நீரஜ்குமார் "போட்டியில் 9-வது ஓவரை வீசும்போதுதான் சூதாட்டம் நடை பெற்றது' என அதற்கான வீடியோவை யும் காட்டினார். அந்த ஓவரை வீசியவர் அங்கீத் சவான் என்கிற சுழற்பந்து வீச்சாளர், அந்த குறிப்பிட்ட ஓவரை வீசுவதற்கு முன்பு பாக்கெட்டில் இருந்து ஒரு கைப்பட்டையை மிக மிக மெதுவாக எடுக்கிறார். பின்பு அதை தனது இடது கையில் நுழைக் கிறார். பின்பு அந்த கைப்பட்டையை டி.வி. காமிராக்கள் கண்களில் படும் படி ஆட்டுகிறார். அடுத்து சில வினாடிகள் ஃபீல்டிங் செட் செய்கிறார். 

அதன்பிறகு முதல் பந்தை மிக எளிதாக தூக்கி அடிக்கும் வகையில் போடு கிறார். அது சிக்சருக்கு பறக்கிறது. அடுத்த பந்தையும் முதல் பந்தை போட்டது போல எளிதாக போடுகிறார். அதுவும் எல்லைக் கோட்டை தாண்ட முயற்சிக்கிறது. அதை ஒரு வீரர் கஷ்டப்பட்டு தடுத்து இரண்டு ரன்கள் மட்டுமே பெறுமளவிற்கு விரைவாக ஃபீல்டிங் செய்கிறார். தனது முயற்சியில் சற்றும் சளைக்காத அங்கீத் சவான் மூன்றாவது பந்தையும் முதலிரண்டு பந்துகளை போட்டது போல பழம் நழுவி பாலில் விழுவது மாதிரி வீசுகிறார். அந்த பந்தும் முதல் பந்தை போல சிக்சருக்கு பறக்கிறது. அடுத்து வீசிய மூன்று பந்துகளை முதல் மூன்று பந்துகளை போல் இல்லாமல் மிக நேர்த்தியாக வீசுகிறார். அந்த பந்துகளை அடிக்க முடியாமல் பேட்ஸ்மேன்கள் தடுப்பாட்டம் ஆடி மூன்று ஒரு ரன்களை மட்டுமே எடுக்கின்றனர்.

சாதாரணமாக கிரிக்கெட் பார்ப்பவர்களுக்கு இதுபோல பந்துகளில் சிக்சர் அடிப்பதெல்லாம் கிரிக்கெட்டில் சாதாரணம் என்று சொல்வார்கள். ஓவர் போடுவதற்கு முன்பு அங்கீத் சவான் கைப்பட்டை அணிந்து டி.வி. காமிராக்களுக்கு காட்டிவிட்டு, ஃபீல்டிங் செட் செய்ய நேரம் எடுத்துக் கொண்டது கிரிக்கெட் சூதாட்டக் காரர்களுக்கு கொடுத்த சிக்னல். அங்கீத் சவானின் இந்த செயல் உலகம் முழுவதும் உள்ள சூதாட்டக்காரர்களுக்கு "இந்த ஓவரில் பதினான்கு ரன்களுக்கு மேல் ராஜஸ்தான் ராயல்ஸ் வழங்கும்... எவ்வளவு பெட்' என பெட் கட்டும் சூதாட்டத்தைத் தொடங்கி வைக்கும். 

இது விளையாட்டு வீரர்களும் சூதாட் டக்காரர்களும் இணைந்து நடத்தும் நாடகம் என தெரியாமல் "அங்கீத் சவான் நல்ல பந்து வீச்சாளர். இந்த ஓவருக்கு முந்தைய ஓவரில் வெறும் மூன்று ரன்கள் மட்டும் வழங்கிய அவரது பந்தில் பதினான்கு ரன்கள் அடிக்க முடியுமா?' என கோடீசுவர ரசிகர்கள் பெட் கட்டுவார்கள். கோடிக்கணக்கான ரூபாயை பெட்டிங் வியாபாரிகள் அள்ளிக்கொண்டு போவார்கள். இதற்காக அங்கீத் சவான் பெற்ற தொகை 60 லட்சம் ரூபாய்.

இது ஸ்பாட் ஃபிக்சிங் எனப் படும் சூதாட்டம். இதில் அங்கீத் சவான் மட்டும் ஈடுபடவில்லை. இந்தியாவுக்காக 27 டெஸ்ட் போட்டி கள், 57 ஒருநாள் போட்டி களில் விளையாடிய கேரள வீரர் ஸ்ரீசந்த், எப்பொழுதும் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தும் அஜீத் சந்த்லியா ஆகிய மூவரும் ஈடுபட்டிருக்கிறார்கள்.     

கடந்த மே 9-ம் தேதி பஞ்சாப் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் டி.வி. கேமராக்களில் தெரியும்படி கர்ச்சீப்பை பேண்ட்டின் இடுப்புப் பகுதியில் வைத்து ஒரு ஓவரில் 15 ரன்கள் விட்டுக்கொடுத்த ஸ்ரீசந்த் அதற்காக பெற்ற தொகை 40 லட்ச ரூபாய்.

அதேபோல், புனே வாரியர்சுக்கு எதிராக மே மாதம் 5-ம் தேதி நடந்த போட்டியில் அஜீத் சந்த்லியா 14 ரன்கள் விட்டுக் கொடுக்க பேசிய தொகை 20 லட்ச ரூபாய். சிக்னல் காட்டாததால் சூதாட்டக்காரர்கள் பணத்தைத் தர மறுத்து விட் டார்கள் என அதி ரடியாக விளக்கினார் கமிஷனர்.

இந்த சூதாட்டத்தை போலீசார் எப்படி கண்டுபிடித் தார்கள் என டெல்லி போலீஸ் வட்டாரத்தில் விசாரித்தோம். "ஒரு தற்கொலைதான் இந்த சூதாட்டத்தை பற்றிய கருவை கொடுத்தது' என்கிறார்கள். கடந்த ஏப்ரல் மாதம், டெல்லி போலீஸில் டெலிபோன்களை டேப் செய்வதில் வல்லுந ரான பத்ரிஸ்தத் என்ற இன்ஸ்பெக்டர் தற் கொலை செய்துகொண்டார். அவரது அலுவலக கருவிகளில் தாவூத் இப்ராகிமுடன் தொடர்புடைய கிரிக்கெட் சூதாட்ட தரகர்கள் பத்து பேர் மற்றும் ஸ்ரீசந்தின் உறவினர் ஜுஜு ஜனார்த்தன ஐயர் ஆகி யோரின் எண்கள் இருந்தன. மும்பை, கொச்சி, கராச்சி, துபாய் போன்ற இடங்களிலிருந்து இந்த எண்களுக்கு போன் கால்கள் வந்து கொண்டிருந்தன. தொடர்ந்து நாங்கள் கண்காணித்தோம். சூதாட்டக் கும்பல் கையும் களவுமாக சிக்கியது என விரிவாக சொன்னார்கள்.

""ஒரு சில முட்டைகள் அழுகிய முட்டைகள் என்பதால் அனைத்து முட்டைகளும் அழுகியதாகி விடுமா?'' என சூதாட்ட சம்பவத்தை பற்றி கருத்து சொல்கிறார் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் சீனிவாசன். பாலில் ஒரு துளி விஷம் கலந்தாலும் ஒட்டுமொத்த பாலும் கெட்டுப் போய்விடும். எனவே ஐ.பி.எல். போட்டிகளை தடை செய்ய வேண்டும் என இந்தியா முழுவதும் கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்ப்பாட்டம் நடத்திக் கொண்டி ருக்கிறார்கள்.

-தாமோதரன் பிரகாஷ்

ad

ad