21 மே, 2013

சூதாட்டப் புகாரில் சிக்கிய 3 வீரர்களின் ஒப்பந்தம் ரத்து: ராஜஸ்தான் அணி நிர்வாகம்
ரசிகர்களின் பேராதரவைப் பெற்றுள்ள ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி, இப்போது சூதாட்டசர்ச்சையில் சிக்கி தவிக்கிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி
வீரர்களான வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த், அங்கீத் சவான், அஜித் சாண்டிலா ஆகிய 3 வீரர்கள் கைதானதைத் தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் பல்வேறு சூதாட்ட தரகர்கள் கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.

கிரிக்கெட் சூதாட்டத்தில் 3 வீரர்கள் மற்றும் 11 தரகர்கள் கைது செய்யப்பட்டது குறித்து கடந்த 9-ந் தேதி அன்று டெல்லி போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர். 
ஐ.பி.எல். போட்டியை தடை செய்யக்கோரி பல்வேறு இடங்களில் ரசிகர்கள் ஆர்ப்பாட்டங்களையும் நடத்தியுள்ளனர். ஐ.பி.எல். போட்டிகளை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை அரசியல் கட்சிகளும் முன்வைத்துள்ளன.

இந்த நிலையில், ஸ்ரீசாந்த், அங்கீத் சவான், அஜித் சாண்டிலா ஆகிய 3 வீரர்களின் ஒப்பந்தம் ரத்து செய்து, ராஜஸ்தான் அணி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது,