21 மே, 2013


ரூ. 1.95 லட்சத்திற்கு ஆடைகள்; கேர்ள் பிரண்டுக்கு பிளாக்பெரி செல்போன் வாங்கிய ஸ்ரீசாந்த்: டெல்லி போலீஸ் 
கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் ஸ்ரீசாந்த், அஜித் சண்டிலா, அங்கீத் சவான் மற்றும் கிரிக்கெட் தரகர்களை
கைது செய்து டெல்லி போலீசார் விசாரணை நடத்தினார். 
தற்போது ஸ்ரீசாந்த்திடம் விசாரணை நடத்திய காவல்துறை ஸ்ரீசாந்த் ஒரே நாளில் ரூ. 1.95 லட்சத்திற்கு ஆடைகள் வாங்கியதாக கூறியுள்ளது. ரொக்க பணமாக கொடுத்து ஆடைகளை வாங்கியுள்ளார். மே 15ம் தேதியில் நடைபெற்ற ஐ.பி.எல். கிரிக்கெட் போடிக்கு முன்பாக இதனை வாங்கியுள்ளார் என்று போலீஸ் தெரிவித்துள்ளது.  ஸ்ரீசாந்த் மேட்ச் பிக்சிங்கில் வந்த பணத்தை கொண்டு தனது கேர்ள் பிரண்டுக்கு பிளாக்பெரி செல்போன் வாங்கி கொடுத்துள்ளார் என்றும் போலீஸ் தெரிவித்துள்ளது.