21 மே, 2013
          ""ஹலோ தலைவரே... ஜெயலலிதா ஆட்சிக்கு வந்து இரண்டு வருடம் முடிஞ்சிடிச்சி. அதே நாளில் சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரும் முடிஞ்சிருக்கு.''நக்கீரன் 

""வழக்கம்போலவே ஆளுந்தரப்பும் அதன் தோழமை எம்.எல்.ஏ.க்களும் போற்றிப் பாராட்டுதல்களாகவும் புகழ் மாலைகளாகவும் சூட்டித் தள்ளிட்டாங்க.''

""நல்ல விஷயங்களைப் பாராட்டுவதும், மக்களுக்கு எதிரான விஷயங்களை துணிச்சலா சுட்டிக்காட்டுவதும்தான் சட்டமன்ற மரபு. ஆனா, தமிழக சட்டமன்றத்தில் புகழுரைகள் மட்டுமே அரங்கேறியது. இரண்டாண்டு சாதனைகளை மக்கள் மன்றத்துக்கு சொல்லணும்னு எல்லாப் பத்திரிகைகளிலும் பக்கம் பக்கமா விளம்பரங்கள் வந்திருந்ததே கவனிச்சீங்களா?''


""கவனிச்சேம்ப்பா.. போன முறை, நூறாண்டு பேசும் ஓராண்டு சாதனைன்னு விளம்பரம் செஞ்சிருந்தாங்க. இந்த  முறை, சாதனை புரிந்த ஈராண்டு.. சரித்திரம் பேசும் பல்லாண்டு என்று விளம்பரம் கொடுத்திருந்தார்கள். தமிழ், ஆங்கிலம்னு தமிழகத்திலிருந்து வரும் எல்லா பெரிய பத்திரிகைகளுக்கும் நல்ல விளம்பர வருமானம். அந்தப் பத்திரிகைகளின் பெங்களூரு  போன்ற வெளிமாநில பதிப்புகளிலும்கூட இதே விளம்பரம் அமர்க்களமா வெளியாகியிருந்தது.'' 


""சட்டமன்றக் கூட்டம் முடிந்ததும் அமைச்சரவை மாற்றம் இருக்கும்ங்கிற எதிர்பார்ப்பு எம்.எல்.ஏ.க்களுக்கும் பயம் மந்திரிகளுக்கும் இருந்ததே.. என்ன நிலவரமாம்?''


""மந்திரிகளில் 22 பேர் மா.செ.க்களாவும் இருக்குறாங்க. இவங்களில் யார்யார் மா.செ.பதவியை சரியாக கவனிக்கிறார்கள்னு உளவுத்துறையிடம் ரிப்போர்ட்  கேட்டி ருக்கிறார் ஜெ. 5 நாட்களுக்கு முன்னாடிதான் அவர் கைக்கு ரிப்போர்ட் வந்ததாம்.  அதில்  காஞ்சி கிழக்கு சின்னைய்யா, திருவள்ளூர் தெற்கு மூர்த்தி, திருவண்ணாமலை மாநகர்  முக்கூர் சுப்ரமணியம், கடலூர் கிழக்கு சம்பத், விழுப்புரம் தெற்கு மோகன், சேலம் புறநகர் எடப்பாடி பழனிச்சாமி, நாமக்கல் தங்கமணி, திருவாரூர் காமராஜ், மதுரை மாநகர் செல்லூர் ராஜூ, விருதுநகர் ராஜேந்திர பாலாஜி, தூத்துக்குடி செல்லப்பாண்டியன் இந்த 11 மந்திரிகளும் மா.செ. பதவியில் சரியா இல்லைன்னு சொல்லப்பட்டிருக்குதாம்.'' 

""சரியா இல்லைன்னா?''


""கோஷ்டி அரசியல், சாதி பார்த்து செயல்படுவது, கட்சிக்காரர்களை அரவணைக்காததுன்னு காரணங்கள் சொல்லப்பட்டி ருக்குதாம். இந்த 11 பேரிடமும் மா.செ. பதவியை மட்டும் பறிக்கலாமா, அல்லது மந்திரி, மா.செ.ன்னு இரண்டு பதவிகளையும் பறிக்கலாமான்னு மேலிடத்தில் ஆலோசனை நடக்குதாம். இதுபற்றி பதட்டத்தோடு பேசிக்கொள்ளும் அ.தி.மு.க வி.ஐ.பிகள், இந்த  11 பேர்  மேலே குற்றச்சாட்டுங்கிறதால மற்ற மந்திரிகள் சரியா இருக்காங்கன்னு அர்த்தமில்லை. உளவுத்துறையிலும் காவல்துறையிலும் அந்த மாண்புமிகுக்கள் உருவாக்கி வைத்திருக்கிற லாபிதான், அந்த ரிப்போர்ட்டிலிருந்து அவங்களைக் காப்பாத்தியிருக்குன்னு சொல்றாங்க.''

""நம்ம மாநிலத்து அரசியலே சுவாரஸ்யம் தாம்ப்பா..'' …
""பக்கத்து மாநிலமான கர்நாடக அரசியலிலிருந்து சுவாரஸ்யமான  தகவல்களை சொல்றேங்க தலைவரே.. அந்த  மாநிலத்து புது முதல்வர்  சித்தராமய்யாதான் இதுவரை பதவியேற்ற முதல்வர்களிலேயே கடவுள் பெயரால் உறுதிமொழி எடுக்காமல் உளமார உறுதி மொழி எடுத்த முதல் முதல்வராம். மதம்,  கோயில், மடாலயம், சாமியார்  இந்த அம்சங்களையெல்லாம் தவிர்க்கவே முடியாத கர்நாடக மாநில அரசியலில் இப்படியொரு முதல்வரான்னு கேட்குறாங்க.''

""அதானே..!''


""ஏழை விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவரான சித்தராமய்யா எதையும் ஒளிவு மறைவில்லாமல்  செய்யக் கூடியவராம். தேர்தல் பிரச்சார சமயத்தில் மாநில காங் கிரஸ் தலைவர்  பரமேஸ்வர் உள்பட பல தலைகள், ராகுல் காந்தியோடு  ஃப்ளைட்டில் பறந்தப்ப, எல்லாருக்கும் சாக்லேட்  கொடுத்திருக்கிறார் ராகுல். பயபக்தியோடு சீனியர் தலைவர்கள் எல்லோரும் அதை வாங்கிக்கொள்ள, சித்தராமய்யா மட்டும் எனக்கு சக்கரை வியாதி. சாக்லேட் வேணாம்னு வெளிப்படையா  சொல்லிட்டாராம். ராகுலோட முகம் மாறியதைப் பற்றிக்கூட அவர் கவலைப்படலையாம். சக்கரை வியாதி உள்ள மற்ற காங்கிரஸ் தலைவர்களெல்லாம் சங்கடத்தோடு சாக்லேட்டை சப்புக் கொட்டியிருக்காங்க. கர்நாடகத்தில் ஒருகாலத்தில் செல்வாக்கோடு இருந்த சோஷலிச அரசியலில் ஈடுபட்டு வளர்ந்தவர் சித்தராமய்யா.''

""அதுதானே அப்புறம், காங்கிரசுக்கு எதிரான ஜனதா கட்சியாக வளர்ந்தது?''


""ஆமாங்க தலைவரே.. .. சோஷலிஸ்ட் தலைவர்கள் நம்ம பெரியாரை ஏற்றுக்கொண்டவங்க. பூணூல் அணியாதவர்கள் உள்ளே வரக்கூடாதுன்னு சொல்ற உடுப்பி மடத்தை கடுமையா எதிர்க் கிறவங்க. சித்தராமய்யா பதவியேற்றதும்  அந்த  மடத்துக்கு அரசாங்கம் கொடுத்த நிதியுதவியை நிறுத்தியதோடு, மடத்தை அறநிலையத் துறையின்கீழ் கொண்டுவரப்போவதாக அறிவித்திருக்கிறார். இப்படிப்பட்டவர்தான் கடவுள் பெயரால் உறுதிமொழி எடுக்காமல் உளமார உறுதி கூறி பதவிப்பிரமாணம் ஏற்றிருக்கிறார். இஸ்கான் அமைப்பினர் மூலமாக தன்னை சந்திக்க நித்யானந்தா சாமியார் முயற்சிப்பதை அறிந்து, இஸ்கான் பிரதிநிதிகளையும் கர்நாடக மதத் தலைவர் பிரமோத் முத்தலிக்கையும் சந்திக்க மறுத் துட்டாரு சித்தராமய்யா.'' 

""டெல்லிக்குப் போய் காங்கிரஸ் தலை வர் சோனியா காந்தியிடம் ஆசி வாங்குவது காங்கிரஸ் முதல்வர்களின் வழக்கம். சித்தராமய்யா அதிலும் ஆர்வம் காட்ட லையே?''

""கூட்டுறவு கடன் தள்ளுபடி, ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சலுகைகள்னு 4000 கோடி ரூபாய்க்கான திட்டங்களை அறிவித்துவிட்டு, அமைச்சரவையை உருவாக்குவதில் பிஸியாகி விட்டார் சித்தராமய்யா. அவருக்குள்ள ஒரே நெருக்கடி, அவரது மூத்த மகன் ராஜேஷ்     தான். தனது குடும்பம் அரசியலில் ஈடு படுவதை சித்தராமய்யா விரும்பலை. ஆனா, ராஜேஷோ தன் அப்பாவை மீறி திருமணம் செய்துகொண்ட நடனமங்கையோடு அர சியலிலும் ஆட்சிநிர்வாகத்திலும் மூக்கை நுழைக்கிறாராம். மக்கள் நலனில் அக்கறை யுள்ள சித்தராமய்யா இதை எப்படி சமாளிக்கப் போகிறார்னு கர்நாடகம் எதிர் பார்க்குது.''

""அதெல்லாம் இருக்கட்டும்ப்பா.. தமிழகத்தின் எதிர்பார்ப்பான காவிரி நீர் விஷயத்தில் பிடிவாதம் பிடிக்காமல், காவிரி நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பின் அடிப்படையில் தண்ணீர் கொடுக்கவும் சித்தராமய்யா மனசு வைக்கட்டும்.''

""உச்சநீதிமன்றத்திடம் குட்டு வாங்குறதுக்கு முன்னாடி மனசு வைக்கணும். தலைவரே.. நான் அடுத்த மேட்டருக்கு வர்றேன். சட்டமன்றக் கூட்டத் தொடர் முடிந்ததும் கொடநாடு எஸ்டேட்டுக்குப் போய் ஓய் வெடுப்பதுங்கிறதுதான் ஜெ.வின் ப்ளானாக இருந்ததாம். ஆனா, டெல்லியில் 21-ந் தேதி திட்டக்கமிஷன் கூட்டம் நடப்பதால அதில் கலந்துக்க முடிவெடுத்திருக்கிறார். ராஜ்யசபா தேர்தலில் சி.பி.எம் ஆதரவோடு அ.தி.மு.கவின் தயவில் எம்.பி பதவி வாங்கிவிடவேண்டும் என்பது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கணக்கு. கட்சியின் பொதுச் செயலாளரான ஏ.பி.பரதன், கடந்த  முறை தி.மு.க தயவில் எம்.பியான டி.ராஜாவையே மீண்டும் எம்.பியாக்க நினைக்கிறார். உடல்நலமில்லாமல் இருக்கும் பரதன், டெல்லி வரும் ஜெ.வை சந்திக்கத்  திட்டமிட்டிருக்கிறார். ஒருவேளை டெல்லியில் சந்திப்பதை ஜெ. விரும்பாவிட்டால், உடல்நலத்தைப் பார்க்காமல் சென்னைக்கே வந்து ஜெ.வை சந்திப்பதுன்னு இருக்காராம். ஆனால், ஜெ.வோ ராஜ்யசபாவில் கம்யூனிஸ்ட் கட்சி சார்பா ஒலிக்கிற குரல் தன்னோட  வாய்ஸாக இருக்கணும்னு நினைப்பதால் ராஜாவைவிட தா.பாண்டியன்தான் சரியா இருப்பாருங்கிறது ஜெ.வோட முடிவாம்.''

""தி.மு.க.வில் லோக்சபா தேர்தலுக்கு மோதல் பயங்கரமா இருக்கே...''…""தஞ்சை மாவட்ட விவகாரத்தைத்தானே சொல்றீங்க தலைவரே…. தஞ்சாவூரின் தற்போதைய எம்.பி.யான பழனிமாணிக்கத்துக்கும், அந்தத் தொகுதியை வரும் தேர்தலில் குறி வச்சிருக்கும் டி.ஆர்.பாலுவுக்கும் பயங்கரமா ஃபைட் நடந்துக்கிட்டிருக்கு. லோக்கல் தி.மு.க.வினரும் ஆளுக்கொரு பக்கம் நின்னுக்கிட்டு மோதிக்கிறாங்க. ஏற்கனவே கலைஞர் வரைக்கும் பாலு-பழனிமாணிக்கம் பஞ்சாயத்துப் போனது. அப்போதைக்கு அது அடங்கினாலும், மறுபடி மறுபடி கிளம் பிக்கிட்டே இருக்குது.''

""லேட்டஸ்ட் மோத லைச் சொல்லுப்பா.''…


""ஒரத்தநாடு ஏரியாவைச் சேர்ந்த துரைராசுங்கிறவர் பழனிமாணிக்கம் சைடிலிருந்து பாலு பக்கம் வந்துட்டாரு. தஞ்சாவூரில் 15-ந் தேதி துரைராசு மகன் திருமணம் டி.ஆர்.பாலு தலைமையில் நடந்தது. கல்யாண விழா முடிந்து காரில் ஏறிய பாலுவை பழனிமாணிக்கம் ஆட்கள் சுற்றி வளைச்சிக்கிட்டாங்க. காரின் முன்பக்கத்தை பலமா தட்டு னாங்க. எங்க மா.செ.வை மதிக்காம நடக்கிற கல்யாணத்துக்கு நீங்க எப்படி வரலாம்ங்கிறதுதான் அவங்க கேள்வி. என்னைக் கூப்பிட்டதால வந்தேன்னு பாலு சொல்லிட்டுக் கிளம்பிட்டாரு. இந்த சம்பவத்தால் இரண்டு தரப்பு ஆட்களும் முட் டிக்கிற அள வுக்கு நிலைமை மோசமாயிடிச்சி. 16-ந் தேதி திரு வோணம் ஒன்றி யத்தில் கலி ராயன்விடுதி ரங்கசாமி வீட் டுத் திருமணத் தில் பாலு கலந் துக்கிட்டாரு. கார்களிலும் டூவீலர்களிலும் அவருக்கு பலத்த பாதுகாப்பு. இந்த விழாவுக்கு பழனி மாணிக்கத்தையும் கூப்பிட்டிருந்தாங்க. அவர் வரலை. வந்திருந்தால் இரண்டு தரப்பும் நேருக்கு நேர் பலமா மோதி யிருக்கும்னு உ.பிக்களே சொல்றாங்க. தஞ்சாவூரை இரண்டு பேரும் குறிவைக்க, இருவரில் யாருக்கு சீட் கொடுத்தாலும் இன்னொரு தரப்பு நிச்சயமா குழிபறிக்கும். இதுதான் தஞ்சாவூர் தி.மு.க நிலவரம்.''

""திருப்பதியில் தமிழக முதல்வரின் செயலாளர் ராம்மோகன்ராவ் மகளோட கல்யாணம் அமர்க்களமா நடந்ததையும், பக்தர்களே அல்லாடுற அளவுக்கு தமிழக போலீஸ் அங்கே கெடுபிடி நடத்தியதையும் நம்ம நக்கீரனில் எழுதியிருந்தாங்களே பார்த்தியா?''


""ராம்மோகன்ராவ் மகளோட வரவேற்பு விழா போன புதன் கிழமையன்னைக்கு சென்னையில் நடந்தது. ஜெ. நேரில் வந்து வாழ்த்தினார். அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் உள்பட பல வி.வி.ஐ.பிக்களும் வந்திருந்தாங்க. நானும் போயிருந்தேன். திருப்பதியில் திருமண விழாவைப் பற்றி சொன்ன ராம்மோகன்ராவ் தரப்பு ஆட்கள், அன்னைக்கு ஒரே நாளில் 500 முகூர்த்தம். மண்டபமும் கிடைக்கலை. ஹோட்டலில் ரூமும் கிடைக்கலை. அதனால ஒரு மடத்தில்தான்  கல்யாணம் நடந்தது. மடத்து கார் பார்க்கிங்கில்தான் ஃபங்ஷன் நடந்தது. யாருக்கும் எந்த தொந்தரவும் கொடுக்கலை. தமிழக  போலீஸ் எந்த கெடுபிடியும் செய்யலைன்னு சொன்னாங்க தலைவரே.''…

""கொடைக்கானலில் அ.தி.மு.க சேர்மன் மீதான நடவடிக்கைக்கு அ.தி.மு.க.காரங்களே வெடி வெடிச்சிக் கொண்டாடினாங்களாமே?''

""கொடைக்கானலில் நடராஜனுக்கும் டி.டி.வி. தினகரன் மாமனாருக்கும் தனித்தனியா பங்களாக்கள் இருக்குது. அதை கொடைக்கானல் சேர்மன் கோவிந்தன்தான் பராமரிக்கிறார்னு நிறைய புகார்கள் மேலிடத்திற்குப் போக, உளவுத் துறை விசாரணையிலும் அது உறுதியாகி யிருக்கு. அதோடு விதிகளை மீறி ஏரிக் கரையில் பழைய கட்ட டங்களை இடிச் சிட்டு புதுக்கட்ட டம் கட்டவும் சேர் மன் அனுமதிச்சிருக் காருன்னும் கோவிந்தனின் புதிய சொத்துகள் பற்றியும் தெரியவர, கட்சியி லிருந்து அதிரடியா நீக்கப்பட்டாரு. அதைத்தான் கட்சியில் உள்ள அவரோட எதிர் குரூப் வெடி வெடித்துக் கொண்டாடித் தீர்த்திருக்குது.''

 லாஸ்ட் புல்லட்!

சென்னை அரும்பாக்கம் ரஃபீக் ராஜா கொலை வழக்கு தொடர்பாக எழும்பூர் கோர்ட்டுக்கு மனைவி ஜமீலா மற்றும் குழந்தைகளுடன் வந்திருந்தார் சலீம்பாபு. அப்போது வழக்கில் தொடர் புடைய மற்றொரு குற்றவாளியான அண்ணா துரை திடீரென சலீம்பாபு கழுத்தில் கத்தியால் ஓங்கிக் குத்தினார். ரத்தம் பீய்ச்சியடித்த நிலையில் மாஜிஸ்திரேட் உமாமகேஸ்வரியின் முன்பு கழுத்தைப் பிடித்தபடி சலீம்பாபு கதற... உடனடியாக கோர்ட் கதவுகள் மூடப்பட்டன. "போலீஸ்... போலீஸ்... ஹெல்ப்... ஹெல்ப்...' என்ற குரல்கள் கோர்ட் வளாகம் முழுதும் எதிரொலித்தாலும் அண்ணா துரை அங்கிருந்து தப்பிவிட்டார். எழும்பூர் கோர்ட்டில் 1996 ஆகஸ்ட் டில் வியாசர்பாடி விஜி, சாட்சிக் கூண்டிலேயே கொலை செய்யப்பட்டிருக் கிறார். 2008 பிப்ரவரியில் அட்வகேட் ரஜினி கோர்ட் வளாகத்திலேயே வெட் டிக் கொல்லப்பட்டிருக்கிறார். இப்படி பல திகில் சம்பவங்களின் பதிவு இங்கே இருப்பதால் இந்த கோர்ட்டுக்கு 53 போலீசார் ரெகுலர் பாதுகாப்பு டியூட்டியில் இருக்கிறார்களாம்?! போலீஸ் கமிஷனர் அலுவலகத்தின் கட்டிடத்தை ஒட்டிய கட்டடத் தில்தான் கோர்ட் இயங்குகிறது என்பது சிறப்பம்சம்... தற்போது சீரியஸாக ஜி.ஹெச்.சில் இருக்கும் சலீம்பாபுவுக்கு பாதுகாப்பாக நூற்றுக்கணக்கில் நிற்கின்றனர் போலீசார்.

மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் உச்சநீதிமன்றத்திலும் இந்தி நடிகர் சஞ்சய்தத்தின் தண்டனை உறுதி செய்யப்பட்ட நிலையில், சிறை செல்வதற்கு 6 மாத அவகாசம் கேட்டார் அவர். ஒரு மாதம் மட்டுமே அவகாசம் அளித்த நீதிமன்றம் சிறையில் அவருக்கு வீட்டு சாப்பாடு தரவும் அனுமதித்தது. அவகாச காலம் முடிந்து, வியாழனன்று (மே 16) மும்பை கோர்ட்டில் சரணடைய சஞ்சய்தத் வந்தபோது ஏராளமானோர் குவிந்துவிட்டனர். கார்களும் பிற வாகனங்களும் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்த, தனது காரிலிருந்து சஞ்சய்தத் இறங்கி, கோர்ட்டுக்கு செல்வதற்கே 20 நிமிடங்களுக்கு மேலானது. கோர்ட் விதித்த 5 ஆண்டுகால தண்டனையில் ஏற்கனவே 18 மாதங்களை சஞ்சய்தத் சிறையில் கழித்திருப்பதால் மேலும் மூன்றரை ஆண்டுகள் அவர் சிறைப்பட்டிருக்க வேண்டும். 

ஜூன் 3-ந் தேதி கலைஞருக்கு 90-வது பிறந்த நாள். கட்சியின் சார்பில் பலவித நிகழ்ச்சிகளுக்கு ஏற் பாடுகள் நடந்துவரும் நிலையில், கவிஞர் வைரமுத்து புதுமையான ஒரு  நிகழ்வுக்குத் தயாராகி வரு கிறார். 90 கவிஞர்களை கலைஞரை சந்திக்க வைத்து, அவருடன் விருந்து  அருந்தி குரூப் போட்டோ எடுத்துக் கொள்ளச் செய்வது என்பதுதான் கவிஞர் வைரமுத்து மேற்கொண்டுவரும் புதுமை.