21 மே, 2013


ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் இருந்து விலகல்! புனே வாரியர்ஸ் அறிவிப்பு!
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் இருந்து புனே வாரியர்ஸ் அணி விலகுவதாக 21.05.2013 செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது. 


புனே வாரியர்ஸ் அணி, இந்த ஆண்டுக்கான தனது உரிமத் தொகையை குறைக்க வேண்டும் என்று பி.சி.சி.ஐ.க்கு கோரிக்கை விடுத்தது. அதனை ஏற்க மறுத்த பி.சி.சி.ஐ., குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் உரிமத் தொகையை செலுத்த வேண்டும் என்று திட்டவட்டமாக கூறிவிட்டது. ஆனால் அந்த காலக்கெடு முடிந்தும் சகாரா நிறுவனம் அந்த தொகையை கட்டவில்லை. 

இதனையடுத்து புனே அணி நிர்வாகம் அளித்துள்ள வங்கி உத்தரவாதத்தை, பணமாக்கும் நடவடிக்கையில் பி.சி.சி.ஐ. இறங்கியுள்ளது. இதனால் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இருந்து விலகும் முடிவை புனே நிர்வாகம் எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

சகாரா நிறுவனம், புனே வாரியர்ஸ் அணியை ரூ.1702 கோடிக்கு வாங்கியது. 10 ஆண்டுகளுக்கு இந்த ஒப்பந்தம் போடப்பட்டிருந்தது.