புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 ஜன., 2014

இழுவைப் படகை பயன்படுத்துவது தவறு; ஒப்புக்கொண்டது - தமிழக குழு
எதுவானாலும் எல்லை மீறினால் கைது செய்வோம் - இலங்கை மீனவர் குழு

மீனவர் குழுக்களின் பேச்சு சுமுகம்: இருநாட்டு அரசுகளே இறுதி முடிவு

* அடுத்த சுற்று பேச்சு இலங்கையில்
* 14 நாள் கால அவகாசம் கோரியது தமிழகக்குழு
இலங்கை மீனவர்களுக்கும் தமிழக மீனவர்களுக்கும் இடையே நேற்று சென்னையில் நடைபெற்ற முதற்சுற்று பேச்சுவார்த்தை சற்று காரசாரமாக ஆரம்பித்து மாலையில் சுமுகமாக நிறைவடைந்தது.
பேச்சுவார்த்தையின் இறுதியில் இருதரப்பும் கூட்டறிக்கையொன்றை வெளியிட்டதுடன் ஊடகவியலாளர்களையும் சந்தித்தனர்.

கூட்டறிக்கையொன்றை வெளியிட்டதுடன் ஊடகவியலாளர்களையும் சந்தித்தனர்.

பேச்சுவார்த்தையில் இரு தரப்பும் பேசிய விடயங்கள் தொடர்பான இறுதி முடிவை இருநாட்டு அரசாங்கங்களுமே எடுக்கும். என்றாலும் நேற்றைய பேச்சுவார்த்தை இரு தரப்புக்கும் இடையே இணக்கப்பாடாகவே நடைபெற்றது என இலங்கை சார்பாகக் கலந்துகொண்ட ரி.சதாசிவம் செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தார்.
தமிழக மீனவர்கள் சார்பில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த யூ. அருளானந்தமும் இந்த செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டார்.
பாரம்பரிய மீன்பிடி பகுதியான பாக்கு நீரிணை பகுதியில் செயற்கையாக வரையறுக்கப்பட்ட எல்லையில் பாரபட்சமின்றி இருதரப்பு பரஸ்பர நல்லிணக்கத்துடன் மீன்பிடிப்பதற்கான பாரம்பரிய மீன்பிடி உரிமையை தமிழக மீனவர்கள் வலியுறுத்திய போதும் இலங்கை மீனவர்கள் முற்றாக நிராகரித்து விட்டனர்.
சென்னையில் நேற்று நடைபெற்ற இலங்கை - தமிழக மீனவர்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தையின் போதே இலங்கை மீனவர்கள் இவ்வாறு நிராகரித்தனர். இலங்கையில் யுத்தம் முடிவடைந்த பின்னரேயே வட பகுதி மீனவர்கள் நிம்மதியாக தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் தமிழக மீனவர்களின் அத்துமீறிய வருகையால் பெரும் இன்னல்களை அனுபவிப்பதாகவும் இலங்கை மீனவர்கள் சுட்டிக்காட்டினர்.
நேற்றுக் காலை 10.00 மணிக்கு பேச்சுவார்த்தைகள் ஆரம்பமான போது காரசாரமான வாதங்கள் இடம்பெற்றதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவித்தன.
தமிழ் நாடு சென்னை தேனாம்பேட்டையில் அமைந்துள்ள டி. எம். எஸ். வளாகத்திலுள்ள மீன்வள இயக்கத்தின் கேட்போர் கூடத்தில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.
நேற்று முழுவதும் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது இலங்கை கடற்பரப்பில் 70 நாட்கள் மீன்பிடிக்க அனுமதி வழங்க வேண்டும் என்பதையே வலியுறுத்தி இலங்கை மீனவர்களை அதற்கு இணங்கச் செய்வதற்கு பிரயத்தனம் செய்தனர். எனினும் இலங்கை மீனவர்கள் இலங்கை கடற்பரப்பிற்குள் மீன்பிடிப்பதற்கான அனுமதி வழங்க முடியாது என்ற நிலைப்பாட்டை உறுதியாக தெரிவித்தனர்.
இதேவேளை, தமிழக மீனவர்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் இழுவைப் படகுகள் பயன்படுத்தி மீன் பிடிக்கும் முறைமை பிழையானது என்பதை தமிழக மீனவர்கள் முதல் முறையாக இப்பேச்சுவார்த்தையின் போது ஏற்றுக் கொண்டனர்.
மேலும், இழுவைப் படகுகள் மூலம் மீன்பிடிப்பதை ஒரு மாத காலத்துக்கு தாம் நிறுத்துவதாகவும் அதற்காக தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதாவுடன் பேச்சு நடத்துவதற்காக 14 நாள் கால அவகாசம் தேவை என்றும் தெரிவித்தனர்.
இதற்கு பதிலளித்த இலங்கை மீனவர்கள் கால அவகாசம் வழங்கப்படுகின்ற 14 நாட்களில் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்பரப்பிற்குள் வருவார்களேயானால் நிச்சயமாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவார்கள். கைது செய்யுமாறு நாம் கடற்படையினருக்கு தெரிவிப்போம் என்றும் திட்டவட்டமாக அறிவித்து விட்டனர். நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் முடிவுகள் குறித்து தமிழக அரசுக்கும், இலங்கை அரசுக்கும் உத்தியோகபூர்வமாக அறிவிப்பது என இரு தரப்பும் நேற்று முடிவு செய்தனர்.
5 மணிக்கு பேச்சுவார்த்தைகள் முடிவடைந்ததன் பின்னர் கூட்டறிக்கையை தயாரித்து வெளியிட்டனர். இழுவைப் படகு மூலம் மீன்பிடிப்பதை ஒரு மாதகாலம் நிறுத்தும் தருணத்தில் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை இலங்கையில் நடத்துவது என்றும் இருதரப்பினரும் முடிவு செய்தனர்.
இலங்கை சார்பாக சென்ற குழுவுடன் சென்னையிலுள்ள இலங்கை துணைத் தூதுவர் ஜபருல்லா கானும் கலந்து கொண்டார்.
இலங்கையின் சார்பில் கடற்றொழில் பணிப்பாளர் நிமால் ஹெட்டியாராச்சி, அமைச்சின் ஆலோசகர் சுபசிங்க, சதாசிவம், பொன்னம்பலம், ஜஸ்டின் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ad

ad