புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 ஜன., 2014

 எனது இறுதி மூச்சு வரை மக்களுக்கு பணியாற்றுவேன்; விளக்கமறியலில் இருக்கும் கமல் வடமாகாண சபையில் உரை 
வடக்கு முலமைச்சர் அரசாங்கத்துடன் இணைந்து மாகாண சபையினை நடாத்தி மக்களுக்கான உரிமைகளைப் பெற்றுத் தரவேண்டும் என சபையின் எதிர்க்கட்சித் தவைலர் கமலேந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

மாகாண சபை அமர்வுகள் நேற்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நெடுந்தீவு பிரதேச சபை தலைவர் ரெக்சியன் கொலை தொடர்பில் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் எதிர்க்கட்சித் தலைவர் கமல்  வைக்கப்பட்டுள்ளார்.

எனினும் சபை அமர்வுகளில் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என கமல் சட்டத்தரணி ஊடாக ஊர்காவற்றுறை நீதிமன்றத்திடம் கோரியிருந்தார்.

அதனையடுத்து குறித்த கோரிக்கையினை பரிசீலித்த நீதிமன்றம் சந்தேக நபரான கமல் மக்களின் ஆணையினைப் பெற்று வடமாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்டவர்.

எனவே  சட்டத்தின் அடிப்படையில் கமலை சபை அமர்வுகளில் கலந்து கொள்ள 23ஆம் திகதி நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது நீதவான் லெனின்குமார் அனுமதியளித்தார்.

அதன்படி நேற்றைய அமர்வில் கமல் பலத்த பாதுகாப்புடன் கலந்து கொண்டு சபையில் உரையாற்றியிருந்தார்.

உரையினை பிந்திய புதுவருட வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டு உரையை ஆரம்பித்த கமல் மேலும் தெரிவிக்கையில்,

இறுதி மூச்சு இருக்கும் வரை எனது மக்கள் பணி தொடரும் என்பதை இந்த உயரிய சபையில் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

அதற்கான நம்பிக்கையும் துணிவும் என்னிடம் இருக்கின்றது. எமக்குரிய பாரிய கடமைகள் எம்முள் பரந்து கிடக்கின்றது. எம்மை நேசித்து ஆணைதந்த மக்கள் பெரிய எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். 

எனவே தமிழ் பேசும் மக்களுக்கு நாம் செய்ய வேண்டிய பணிகள் நிறைய உண்டு. எமது அரசு சகல வழிகளிலும் ஆதரவு வழங்கி வடமாகாண சபையின் ஊடாக எமது மக்களுக்கு மேலும் பல உதவித்திட்டங்களை ஜனாதிபதி வழங்குவார் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

மேலும் கனிந்து வந்த சந்தர்ப்பங்களை தவறவிடாது எமது மக்களின் உண்மை நிலையான நலனை உணர்ந்து கொண்டு அரசாங்கத்தின் நலன்களைப் பலப்படுத்தி எமது மக்களுக்காக அனைவரும் ஒன்றுபட்டு உழைப்போம்.

அத்துடன் எமது வேற்றுமைகளைக் கழைந்து மக்களுக்காக இந்த சபை சேவை செய்ய வேண்டும் என்ற நம்பிக்கையுடன் மகிந்த சிந்தனை ஊடாக உழைப்போம்.

மேலும் 5அமர்வுகள் முடிந்தும் பத்திரிகை வாயிலாகவும் அறிக்கைகளாகவும் வெளியிடுகின்றோமே ஒழிய செயற்பாட்டு வடிவில் இன்னமும் இடம்பெறவில்லை. 

எதிர்ப்புக்கு அப்பால் மக்களின் உணர்வுகளை உணர்ந்து கொண்டு செயற்பட வேண்டும். அத்துடன் முலமைச்சர் அரசுடன் சேர்ந்து மாகாண சபையினை நடாத்தி மக்களுக்கான உரிமைகளைப் பெற்றுத் தரவேண்டும் என்கிறார்.

ad

ad