புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 ஜன., 2014



  1. ஜெனிவா பிரேரணையை ஆதரிக்கக் கோரி தொடர் போராட்டத்தில் குதிக்கிறது தமிழகம்! - உலகத் தமிழர் பேரமைப்பின் ஏற்பாட்டில்"ஜெனிவா மாநாட்டில் இலங்கை அரசுக்கு எதிராக சர்வதேச விசார ணையை வலியுறுத்தும் தீர்மானத்தை அமெரிக்காவுடன் சேர்ந்து இந்திய மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் எனக் கோரி தமிழகத்தில் அடுத்த மாதத்திலிருந்து மாபெரும் தொடர் போராட்டங்கள் நடைபெறவுள்ளன."

இவ்வாறு இந்தியாவின் மூத்த அரசியல்வாதியும் உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவருமான பழ.நெடுமாறன் 'சுடர் ஒளி'யிடம் தெரிவித்தார்.

போர்க்குற்றங்களை இழைத்த ராஜபக்­ஷ அரசை இனியும் தப்பவிடக் கூடாது. எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத்தொடர், இலங்கை அரசின் கொடூரங்களை அம்பலப்படுத்தும் மாநாடாக அமையவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

"ராஜபக்­ஷ அரசு தமிழ் மக்கள் மீது இழைத்த மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்களுக்கு முள்ளிவாய்க்கால் பேரவலம் தக்க சான்றாகா உள்ளது. அங்கு பல்லாயிரக்கணக்கான எமது தமிழ் உறவுகளை குண்டு வீசியும், துப்பாக்கியால் சுட்டும், சித்திரவதை செய்தும் இந்த ராஜபக்ஷ அரசின் படைகள் கொன்றழித்தன.

வன்னியில் இறுதிக்கட்டப் போரில் அரங்கேறியது தமிழினப் படுகொலைதான் என்பதையும், அங்கு அரச படை கள் போர்க்குற்றங்களைப் புரிந்துள்ளனர் என்பது உண்மைதான் என்பதையும் இந்திய மத்திய அரசு பகிரங்க மாகத் தெரிவித்துள்ளது. எனவே, குற்றமிழைத்த ராஜபக்­ஷ அரசுக்கு தண்டனையைப் பெற்றுக்கொடுக்க இந்தியா ஒருபோதும் தயங்கக்கூடாது.

இறுதிக்கட்டப் போரில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் தொடர்பில் இலங்கை அரசுக்கு எதிராக சர்வதேச விசாரணையை வலியுறுத்தும் தீர்மானத்தை எதிர்வரும் மார்ச் மாதம் ஐ.நா. மனித உரிமைகள் சபையில் நிறைவேற்ற அமெரிக்கா முழுமூச்சுடன் தனது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது என்று அண்மையில் இலங்கை வந்து நிலைமைகளை நேரில் பார்வையிட்ட சர்வதேச போர்க்குற்ற விவகாரங்களைக் கையாளும் அமெரிக்காவின் விசேட தூதுவர் ஸ்டீபன் ஜே.ரெப், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரிடம் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இறுதிப்போர் நடை பெற்ற முல்லைத்தீவு மாவட்டத்துக்கு நேரில் சென்ற அவர் அங்கு போர்க் குற்றங்கள் தொடர்பான தரவுகளையும் சேகரித்துக்கொண்டு அமெரிக்கா சென்றுள்ளார்.

எனவே, எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் மாநாட்டில் போர்க்குற்றங்களை இழைத்த இலங்கை அரசுக்கு எதிராக சர்வதேச விசாரணையை வலியுறுத்தும் தீர்மானத்தை அமெரிக்காவுடன் சேர்ந்து இந்திய மத்திய அரசு நிறைவேற்ற நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.

இதனை வலியுறுத்தி தமிழகத்தில் அடுத்த மாதத்திலிருந்து மாபெரும் தொடர் போராட்டங்களை நடத்தவுள்ளோம். ஈழத்தமிழர்களுக்காகக் குரல்கொடுக்கும் தமிழகத்தின் அனைத்துக் கட்சிகளையும் அணி திரட்டி எமது போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம்" - என்றார்.

ad

ad