புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 ஜன., 2014

தன் மீதான குற்றச்சாட்டுகள் அபாண்டமானவை என்று மறுத்துக் கூறிய மு.க.அழகிரி, அவர் கூறிய குற்றச்சாட்டுகள், அவர் எனக்கு அளித்த பிறந்த நாள் வாழ்த்து என்று கூறினார்.
இன்று காலை திமுக தலைவர் கருணாநிதி, தன் மகனும் முன்னாள் தென்மண்டல அமைப்புச் செயலாளருமான மு.க.அழகிரி குறித்து செய்தியாளர்களிடம் ஒரு விளக்கத்தை அளித்தார். அவர் மீது பல குற்றச்சாட்டுகளையும் கூறினார். இந்தக் குற்றச்சாட்டுகளை
மறுத்து, இன்று மாலை மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய மு.க. அழகிரி, இவ்வாறு தன் கருத்தைக் கூறினார்.
அவர் செய்தியாளர்களிடம் கூறியது...
தலைவர் என் மீது இப்படி ஒரு அபாண்டத்தைச் சுமத்துவார் என்று கனவில் கூட நினைத்துப் பார்த்திருக்க முடியாது. ஆனால் அதை அவர் எனக்கு வழங்கிய பிறந்த நாள் வாழ்த்தாக ஏற்றுக் கொள்கிறேன். ஏற்றுக் கொள்கிறேன் என்றால் அவர் பிறந்த நாள் வாழ்த்து சொன்னதாக நான் ஏற்றுக் கொள்கிறேன்.
ஆனாலும் இந்த நேரத்தில் சில விளக்கங்களை சொல்ல விரும்புகிறேன்,.
நான் 24ம் தேதி காலை தலைவரை சந்தித்து விளக்கங்களை எடுத்துச் சொன்னேன். தொண்டர்களின் குற்றச்சாட்டுகளையும் ஒன்றிய செயலாளர்களின் குற்றச்சாட்டுகளையும் தலைவரிடம் காண்பித்தேன்.
அதற்குக் கிடைத்த பரிசு என்னை கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்தது.
நியாயத்துகாக தொண்டனுக்காக போராடியதற்காக இப்படிப்பட்ட பரிசு கிடைத்தது.
ஆனால் அன்றைய தினம் என்னை விலக்கிய போது பொதுச் செயலாளர் என்னை விலக்கியதற்கான காரணங்களைச் சொல்லியிருக்கிறார். பல காரணங்களில் இன்று தலைவர் சொன்ன எந்தப் பழியும் அதில் இல்லை என்பது உங்களுக்கு தெரியும்.
பொதுச் செயலாளரின் ஒழுங்கு நடவடிக்கை முரசொலியில் உள்ளது பாருங்கள். அவர் சொன்ன ஒரு குற்றச்சாட்டு, இத்தகைய குற்றச்சாட்டுகளைக் கூற அறிவாலயம் இருக்கிறது, கட்சி அமைப்பு இருக்கிறது என்றார். ஆனால் நான் ஏன் குறைகளை ஏன் அவரிடம் சொன்னேன்.
அறிவாலயம் இல்லையா என்று அவர் கேட்டுள்ளார். ஆனால், இது குறித்து அவர்கள் எல்லாமே சிஐடி காலனியில்தான் பேசியிருக்கிறார்கள்.
தொண்டர்களின் குற்றச்சாட்டுகள், ஒன்றியச் செயலாளர்களின் குற்றச்சாட்டுகள் எல்லாமே அறிவாலயத்துக்கு பேக்ஸ் செய்யப்படுகிறது. ஆனால், குற்றச்சாட்டுகள் மறைக்கப்படுகிறது. அவை எதுவுமே தலைவருக்கோ பொதுச் செயலாளருக்கோ சென்று சேர்வதில்லை.
அதனால்தான் நேரில் தலைவரிடம் சென்று சொன்னேன்.
இது மதுரையில் மட்டும் நடக்கவில்லை; தமிழ்நாடு முழுக்க நடக்கிறது என்று குற்றச்சாட்டை சொன்னேன்..
அன்றைய தினம் என்னை விலக்கியபோது, என்னை விலக்கியதற்கான காரணங்களை எல்லாம் சொல்லியிருக்கிறார். ஆனால் இன்று அவர் நான் ஏதோ முதலிலேயே பத்திரிகைகளுக்குக் கொடுத்தேன் என்றார். ஆனால் நான் நீக்கப்பட்ட பிறகுதான் சொன்னேன்.
இன்னொரு உண்மையை சொல்லணும். 26ம் தேதி நான் துரை முருகனை சந்தித்தேன்.
ஏன் வீரவணக்க நாள் கூட்டத்துக்கு போகலை என்று கேட்டேன். அவர் போகலை கேன்ஸல் பண்ணிட்டேன் என்றார்.
அவரிடம் துணை பொதுச் செயலர் என்ற முறையில் குற்றச்சாட்டை சொன்னேன். தலைவரிடம் சொன்னேன் பரிசீலனை செய்யுங்கன்னு சொன்னேன். இதுதான் நடந்தது. ஆனால் நான் ஒன்று சொல்கிறேன்... நான் என்றும் தொண்டர் பக்கம் இருப்பேன். தொண்டர்களுக்கு என்னைப் பற்றி நன்றாகத் தெரியும். நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன்..; தலைவர் நன்றாக இருக்கணும் நூறாண்டுகள் வாழணும். அவருக்கு முன்னாடி நாங்கள் சாகணும். அவர் சிந்தும் கண்ணீர் எங்கள் பிணத்தின் மீது விழ வேண்டும் என்றுதான் நாங்கள் ஆசைப்படுகிறோம்....
என்று செய்தியாளர்களிடம் பேசினார் மு.க. அழகிரி.
தன்னுடைய விளக்கத்தை செய்தியாளர்களிடம் பேசிய உடனேயே மு.க.அழகிரி தனது காரில் ஏறிச் சென்றுவிட்டார். செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க அவர் விரும்பவில்லை என்று தெரிகிறது.

ad

ad