புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

28 ஜன., 2014

அழகிரி கண்ணீர் : குடும்பத்தினர் அப்செட்
கோபாலபுரத்தில் தன்னை சந்தித்தபோது,  மு.க.ஸ்டாலினை கொன்றுவிடுவதாக மிரட்டினார் அழகிரி என்று திமுக தலைவர் கலைஞர், அழகிரியை கட்சியில் இருந்து நீக்கியது குறித்த விளக்க
பேட்டியில் குறிப்பிட்டார்.


இதைக்கேட்டதும் அழகிரியும்,  அவரது குடும்பத்தினரும் அப்செட் ஆனார்கள்.  இதையடுத்து அழகிரி செய்தியாளர்களுக்கு அளித்த விளக்கத்தில்,  கலைஞர் கூறிய குற்றச்சாட்டில் உண்மையில்லை என்று மறுப்பு தெரிவித்தார்.  அவர் பேட்டியின் முடிவில்,  தலைவர் நல்லாயிருக்கணும்.  நூறாண்டுகளுக்கு மேல் வாழணும்.  அவருக்கு முன்னாடி நாங்கள் சாகணும்.  கலைஞரின் கண்ணீர் எங்கள் பிணத்தின் மீது விழவேண்டும் என்பதுதான்,  என் ஆசை என்று உருக்கமாக குறிப்பிட்டார்.
பேட்டியை முடித்துக்கொண்டு வீட்டிற்குள் நுழைந்த அழகிரியின் கண்களில் இருந்து கண்ணீர் வடிந்தது.  அவரே துடைத்துக்கொண்டார்.  அதற்குள் அவரது மனைவியும், மகன் துரைதயாநிதியும் அவரை தேற்றி, வீட்டிற்குள் அழைத்துச்சென்றனர். 
வீட்டிகுள் சென்ற அவர், யாரிடமும் பேசாமல் அப்செட்டில் இருந்தார்.  இதனால், அவரது குடும்பத்தினரும் படு அப்செட்டில் இருந்தனர்.  20 நிமிடங்கள் கழித்து, வெளியே வந்த அழகிரி,  தன்னை சந்திக்க வந்த கட்சியினரை பார்த்துவிட்டு மீண்டும் வீட்டிற்குள் சென்று அப்செட் ஆகிவிட்டார்.