புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 ஜன., 2014

காணி அபகரிப்பு பிரச்சினைகள் தொடர்பான மாநாட்டில் பங்கேற்க த.தே.கூட்டமைப்பினர் லண்டன் விஜயம்
பிரித்தானிய தமிழ் அவையின் அழைப்பின் பேரில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் குழுவொன்று லண்டன் சென்றுள்ளது.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சுரேஷ் பிரேமச்சந்திரன், எஸ்.சிறிதரன் மற்றும் பா.அரியநேத்திரன் ஆகியோர் லண்டன் சென்றுள்ளனர்.
கூட்டமைப்பின் செயலாளர் மாவை சேனாதிராஜா மற்றும் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரும் இந்த மாநாட்டிற்கு செல்லவுள்ள நிலையில் அவர்களுக்கு இன்னும் வீசா அனுமதி கிடைக்கவில்லை. பெரும்பாலும் இன்னும் ஓரிரு தினங்களில் அவர்களும் லண்டன் செல்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.
வட கிழக்கு மாகாணத்தில் யுத்தத்தின் பின் ஏற்பட்டிருக்கும் காணி அபகரிப்புக்கள், சுவீகரிப்பு உள்ளிட்ட ஏனைய காணிசார் பிரச்சினைகள் சம்பந்தமாக சர்வதேச சமூகத்திற்கு ஜெனிவா மாநாட்டை முன்னிட்டு விளக்கும் முகமாக காணி மாநாடொன்றை பிரித்தானிய தமிழ் அவை ஏற்பாடு செய்துள்ளது.
இரு தினங்கள் இங்கிலாந்தில் நடைபெறவுள்ள இம்மாநாட்டுக்கு சர்வதேச நாடுகளைச் சேர்ந்த பல பாராளுமன்ற உறுப்பினர்கள் அழைக்கப்பட்டிருக்கின்றார்கள்.
இரண்டு நாட்கள் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் யுத்தத்தின் பின் வடக்கு, கிழக்கில் பல்வேறு வகையில் அபகரிக்கப்பட்ட காணிகள், குடியிருப்பு நிலங்கள், வயல்கள், தரிசுநிலங்கள், அரச காணிகள் போன்றவை அபகரிப்பு செய்யப்பட்டமை தொடர்பாகவும் சுவீகரிப்பு செய்யப்பட்ட நிலைகள் தொடர்பாகவும் அரசின் அத்துமீறிய செயல்கள் வடக்கு, கிழக்கைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் புத்திஜீவிகள் ஆகியோரால் விபரமாக சர்வதேச பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எடுத்துக் கூறப்படவுள்ளது.
எதிர்வரும் மார்ச் மாதம் 3ம் திகதி தொடக்கம் 28 ம் திகதி வரை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை மாநாடு ஜெனிவாவில் நடைபெறவுள்ளது.  இந்த மாநாட்டை மையப்படுத்தி பிரித்தானிய தமிழ் அவை குறித்த காணி ஆய்வு மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளது.

ad

ad