புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 ஜன., 2014

 போராட்டத்தில் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் 
இன்று காலை கூடிய கிழக்கு மாகாண சபை காலை நேர தேனீர் இடைவேளையுடன் ஒத்தி வைக்கப்பட்டதால் அதனை எதிர்த்து தமிழத் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை
அங்கத்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கின்றார்கள்.

முகாமைத்துவ உதவியாளர்களை பணிக்கமர்த்தும் கிழக்கு மாகாண சபைப் பொதுப்பரீட்சைக்குத் தோற்றி அதி கூடிய புள்ளிகளைப் பெற்றிருந்தும் தமிழர்கள் எவருமே இந் நியமனம் பெறத் தகுதியுடையவர்கள் அல்ல என கிழக்கு மாகாண சபை முடிவெடுத்துள்ளது.

ஏனெனில் கிழக்கின் நியமனங்களில் இன விகிதாசார அடிப்படையில் தமிழர்களை நியமிக்க முடியாதுள்ளதாக கிழக்கு மாகாண சபை தெரிவித்துள்ளது. இதனால் தமிழர்களின் நியமனம் தடைப்பட்டுள்ளதுடன் நூற்றுக்கும் மேற்பட்ட முஸ்லிம்களும் சுமார் 84 சிங்களவர்களும் நியமனத்திற்காக நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

இதே வேளை அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் பணிப்பாளர்களின் நியமனங்களின் போதோ அல்லது ஆசிரிய நியமனங்களின் போதோ இவ்வாறான இன விகித அடிப்படை பின்பற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அண்மையில் கிழக்கு மாகாண உள்ளூராட்சித் திணைக்களத்திற்குப் பணிப்பாளராக முஸ்லிம் ஒருவர் நிமிக்கப்பட்ட போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்ப்பை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

ad

ad