தோப்பூர் அகதி முகாமில் 13 வயது மாணவி மர்மமான முறையில் மரணம்
திருகோணமலை மாவட்ட தோப்பூர் பட்டித்திடல் அகதி முகாமில் இருந்த சிவசோதி திலனிக்கா என்ற 13 வயது மாணவி மர்மமான முறையில் பலியான சம்பவம் ஒன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்துள்ளது.
இந்த மரணம் கொலையா? தற்கொலையா? என்பதில் சந்தேகம் இருப்பதால் தோப்பூர் வைத்தியசாலையில் இருந்து திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டிருப்பதாக தோப்பூர் திடீர் மரண விசாரணை அதிகாரி ஏ. ஜே. நூருள்ளா தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் குறித்து மூதூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஏழாம் தரத்தில் கல்வி கற்கும் இவர் சம்பூரில் இருந்து இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இடம்பெயர்ந்து தனது குடும்பத்துடன் தோப்பூர் பட்டித்திடல் முகாமில் தஞ்சமடைந்து வாழ்ந்து வந்தமை குறிப்பிடத்தக்கது.