புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 பிப்., 2014



இலங்கையின் வடக்கு, கிழக்கில் இடம்பெற்ற போர் குற்றங்களை கண்டறிந்து சர்வதேச விசாரணைகளை நடத்துவதற்காக ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை அதிகாரி ஒருவரை நியமிக்க உள்ளதாக தெரியவருகிறது.
இந்த விசாரணை அதிகாரியை நியமிப்பது தொடர்பில் இலங்கை அரசாங்கம் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவின் கூட்டத் தொடரில் சமர்பிக்கப்பட
உள்ள அறிக்கை நவநீதம்பிள்ளை இலங்கைக்கு அனுப்பியிருந்தார்.
அதற்கு இலங்கை அரசாங்கம் பதிலையும் அனுப்பியுள்ளது.
இலங்கையில் இடம்பெற்ற போர் குற்றங்கள் தொடர்பில் சுதந்திரமான சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என பிள்ளை அந்த அறிக்கையில் கூறியிருந்தார்.

ad

ad