தென்னாபிரிக்க அனுபவத்தின் அடிப்படையில் இலங்கையில் உள்நாட்டு தீர்வு எட்டப்படும் என்று இலங்கையின் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
எனினும் தென்னாபிரிக்காவில் பேசப்பட்ட விடயங்களை முழுமையாக வெளியிட அவர் மறுத்துவிட்டார்.
தென்னாபிரிக்கா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளின் பிரச்சினைகள் ஒரே மாதிரியானவை அல்ல.
எனினும் தென்னாபிரிக்காவை போன்றே இலங்கையிலும் பிரச்சினையை உள்நாட்டிலேயே தீர்க்கமுடியும் என்ற நம்பிக்கை உள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்
பிபிசிக்கு அளித்த செவ்வியின் போது இலங்கை போருக்கு பின்னர் மேற்கொண்டு வரும் முயற்சிகளை தென்னாபிரிக்கா வரவேற்றுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
அதேநேரம் தென்னாபிரிக்க தரப்பு இலங்கையில் தீர்வு ஒன்றை திணிக்க தயாரில்லை என்றும் டக்ளஸ் குறிப்பிட்டா