புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 பிப்., 2014

குற்றவாளிகளை நியாயப்படுத்துவதில் விக்னேஸ்வரனும் ஜெயலலிதாவும் சரிநிகரானவர்கள்ä-தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் 
இந்தியாவில் ஜெயலலிதாவைப் போலவே இலங்கையில் விக்னேஸ்வரன் செயற்படுகின்றார் அரசாங்கத்தை எதிர்த்து செயற்படுவதே இருவரினதும் கொள்கையென தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது.
மேலும் குற்றவாளிகளை நியாயப்படுத்துவதில் விக்னேஸ்வரனும் ஜெயலலிதாவும் சரிநிகரானவர்கள். இதை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அந்த இயக்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர தெரிவிக்கையில்,
வட மாகாண சபை முதலமைச்சர் விக்னேஸ்வரனின் கொள்கைகள் அனைத்துமே இந்தியா தமிழ் நாட்டு முதலமைச்சர் ஜெயலலிதாவின் செயற்பாடுகளுடன் தொடர்புபட்டதாகவே உள்ளது. தமிழ் மக்களின் வாக்குகளை கொள்ளையடித்து தம்மை பலப்படுத்தும் தந்திரம் இருவருக்குமே நன்றாகத் தெரிந்துள்ளது.
வட மாகாண சபைத் தேர்தல் காலத்தில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் விடுதலைப்புலி கைதிகளை விடுவிக்கக் கோரி தமிழர் மனதை மாற்றி வாக்குகளை பெற்றார். அதே சூத்திரத்தினை தற்போது ஜெயலலிதாவும் கையாண்டுள்ளார்.
ராஜீவ்காந்தி கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளிகளை இன்று முதல்வர் ஜெயலலிதா விடுவிக்கக் கோரியுள்ளமையும் அவர்களுக்காக குரல் கொடுத்திருக்கின்றமையும் முழுவதுமே தேர்தலை மையமாக வைத்து நடத்திய நாடகமே.
இன்று மத்திய அரசாங்கத்திற்கு கட்டுப்படாத வகையிலேயே விக்னேஸ்வரனினதும் ஜெயலலிதாவினதும் செயற்பாடுகள் அமைந்துள்ளது. வடக்கினையும் தமிழகத்தினையும் ஒன்றாக்கி தனி ஆட்சியினை நடத்தும் செயற்பாட்டினையே இவர்கள் மேற்கொள்கின்றனர்.
இவர்களின் திட்டத்தினை நிறைவேற்ற அரசாங்கம் இடமளிக்குமாயின் எதிர் காலத்தில் முழு இலங்கையையும் தாரைவார்க்கும் நிலைமை ஏற்படும்.
மேலும் இன்று வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் குற்றவாளிகளை நிரபராதிகளாக்கி மன்னிக்க முடியாத குற்றத்தினையும் மறக்க வைக்கும் செயற்பாட்டினையே செய்து வருகின்றனர்.  சர்வதேச அளவில் இவர்கள் இருவரையும் தண்டித்து நீதியை நிலைநாட்ட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

ad

ad