புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 பிப்., 2014


உலகக் கிண்ண கால்பந்து: 25 இலட்சம் டிக்கெட் விற்பனை

உலகக் கிண்ண கால்பந்து போட்டிகளைக் காண ஆர்வம் அதிகரித்துள்ளது. இதுவரை 25 இலட்சம் டிக்கெட்டுகள் விற்பனை ஆகியுள்ளன.
சர்வதேச கால்பந்து சம்மேளனம் (பிஃபா) சார்பில் உலக கிண்ண
கால்பந்து தொடர் வரும் ஜூன் 12 முதல் ஜூலை 13 வரை பிரேசிலில் நடக்கவுள்ளது. இதற்கான டிக்கெட் விற்பனை தற்போது நடக்கிறது.
மொத்தம் 64 போட்டிகள் கொண்ட தொடரைக் காண இதுவரை 228 நாடுகளில் இருந்து 1 கோடி பேர் டிக்கெட் கேட்டு விண்ணப்பித்துள்ளனர். இதில் பிரேசிலில் மட்டும் 9,06,000 டிக்கெட்டுகள் விற்றுள்ளன.
அடுத்த அமெரிக்கா (1,25,000) கொலம்பியா (60,000) ஜெர்மனி (56,000) மற்றும் ஆர்ஜென்டினாவில் (54,000) அதிகப்படியான டிக்கெட்டுகள் விற்றுள்ளன. இறுதி, காலிறுதி இங்கிலாந்து- இத்தாலி, அமெரிக்கா- பேர்த்துக்கல் போட்டி உட்பட மொத்தம் 7 போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் முழுமையாகத் தீர்ந்துவிட்டன.
இது தவிர மார்ச் 12 முதல் 1,59,000 டிக்கெட்டுக்கள் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் விற்கப்படவுள்ளது.

ad

ad