நெடுந்தீவு கடற்பரப்பில் 29 தமிழக மீனவர்கள் கைது
ஒரு மாதகாலத்திற்கு ஊடுருவல் செய்யமாட்டோமென அறிவித்து சிலமணி நேரங்களில் எல்லை தாண்டினர்
7 படகுகளும் கைப்பற்றப்பட்டன
இலங்கை கடற்பரப்பினுள் நுழைய மாட்டோம், தடை செய்யப்பட்ட மீன் பிடிவலைகளை பயன்படுத்த மாட்டோம் என்ற அறிவித்தலை விடுத்த ஒரு சில மணி நேரத்திலேயே இலங்கை கடற்பரப் பினுள் அத்துமீறி நுழைந்த தமிழக மீனவர்கள் 29 பேர் நெடுந்தீவுக்கு அருகே நேற்று கைது செய் யப்பட்டுள் ளனர். 29 தமிழக மீனவர்களுடன் அவர்களது 7 வள்ளங்களையும் கைப்பற்றியதாக கடற்படையின் பேச்சாளர் கமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார். தமிழகத்தின் பாம்பன் மற்றும் மண்டபம் பகுதியைச் சேர்ந்த மீனவர்களே இவ்வாறு கைதாகியுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் காங்கேசன்துறை கடற்படை தளத்துக்கு அழைத்துவரப்பட்டு கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
நாகை மற்றும் புதுக்கோட்டை இராமேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் கூடிய தமிழக கடற்றொழிலாளர்களின் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமைய இலங்கை கடற்பரப்புக்குள் நுழைவதில்லை, தடை செய்யப்பட்டுள்ள மீன்பிடி வலைகளை உபயோகிப்பதில்லை என்ற முடிவை எடுத்திருப்பதாக அறிவித்திருந்தனர். இது தொடர்பாக இலங்கையின் கடற்றொழில் அமைச்சுக்கும், வடமாகாண கடற்றொழில் தலைவர்களுக்கும் அறிவித்திருந்தனர்.
எனினும் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டு சில மணி நேரத்திலேயே இலங்கையின் நெடுந்தீவுக்கு அருகே வந்து மீன்பிடிப்பில் ஈடுபட்டனர்.
சுமார் 800 க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் இவர்கள் நேற்று முன்தினம் இரவு தமிழகத்திலிருந்து புறப்பட்டதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றனர்.
தமிழக மீனவர்கள் தமது பாரம்பரிய கடற்பகுதியில் மீன்பிடிப்பதாக கூறிக்கொ