ஷோன் மார்'pன் சதத்தால் சரிவிலிருந்து மீண்டது அவுஸ்திரேலியா
தென் ஆபிரிக்கா சென்றுள்ள அவுஸ்திரேலிய அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி செஞ்சுரியனில் நேற்றுமுன்தினம் துவங்கியது. நூணயச்சுpற்சியில் வென்ற தென் ஆபிரிக்க அணித் தலைவர்; கிரேம் ஸ்மித் களத்தடுப்பை தேர்வு செய்தார். அவுஸ்திரேலிய அணியில் துலான் அறிமுக வீரராக வாய்ப்பு பெற்றார்.
ஸ்டைன் வேகம்:
அவுஸ்திரேலிய அணிக்கு ரோஜர்ஸ், வோர்னர் ஜோடி மோசமான துவக்கம் தந்தது. முதலில் ரோஜர்ஸ் 4 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தனர். ஸ்டைன் வேகத்தில் வோர்னர் (12) கிளம்பினார். துலான் (27), தலைவர்; கிளார்க் (23) விரைவில் நடையை கட்டினர். இதனால் 98 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டை இழந்து தடுமாறியது.
மார்ஷ் சதம்:
பின் இணைந்த ஷோன் மார்ஷ், ஸ்டீவன் ஸ்மித் ஜோடி அணியை சரிவிலிருந்து மீட்டது. ஸ்மித், டெஸ்ட் அரங்கில் 6வது அரை சதத்தை பதிவு செய்தார். மறுமுனையில், டுமினி பந்தை பவுண்டரிக்கு விரட்டிய மார்ஷ், டெஸ்ட் அரங்கில் 2வது சதத்தை எட்டினார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில், அவுஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில், 4 விக்கெட்டுக்கு 297 ஓட்டங்கள் எடுத்திருந்தது. மார்ஷ் (122), ஸ்மித் (91) ஆட்டமிழக்காமல் களத்திலுள்ளனர்.