புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 பிப்., 2014

பாலு மகேந்திரா 
ஆக்கம்: புங்குடுதீவு அ.பகீரதன்

எழுத வேண்டும் என
எத்தனிக்கிறது என்பேனா

எதை எழுதுவது?
எழுதி என்னாவது?
புழுதி படர்ந்த புத்தகமா
ய்
என் பேனா

ஆற்றாமை
அழுத கண்ணீராக……
தேற்றாமை
பெரும் துக்கமாக….

பாலு மகேந்திரன்
எங்கள் ஈழ மகேந்திரன்
கோடாம்பக்கமே புருவம்
உயர்த்திய வானச் சந்திரன்

சிறுவயதில்
தீவிர வாசிப்பு
தீரா வெறியோடு


சினி்மா நேசிப்பு

லண்டனில் பட்டப் படிப்பு
புனேயில் சினிமாப் படிப்பு
இறுதியாய் சினிமா மட்டுமே பிடிப்பு
உறுதியாய் அதுவே சுவாசத் துடிப்பு

முதல் படம்

”அழியாக் கோலம்”
சினிமாவில் அவருக்கு
அழியாக் கோலம்

ஐந்து முறை
தேசிய விருது
அதில் இரண்டு
ஒளியமைப்பிற்காக

பிடல் காஸ்ரோவை
பின்பற்றித் தொப்பி
கடல் கடந்து சாதித்த
ஈழத்தின் சிற்பி

படைத்தவனே பிரமிக்கும்
பன்முக ஆற்றல் அவர்க்கு
படைத்தார் ”பாலா” க்களை
நிலைத்தார் ”சீமான்” களாய்

சினிமாப்
பட்டறை வைத்தாய்
பலருக்கு அங்கே
முகவுரை கொடுத்தாய்

உன் பணி தொடர
பலர் வருவார்
உன் படம் போல
இனியார் தருவார்?

”வீடு” படம் எடுத்தபோதே
வீடுபேறு அடைந்துவிட்டாய்….

ஆன்மா சாந்தியடையட்டும்.

ad

ad