புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 பிப்., 2014


குடும்பத்தை கலைத்த நபருக்கு 150 லட்சம் அபராதம்
திருமணமான பெண் ஒருவருடன் தகாத உறவு கொண்டிருந்த விமானப் பொறியியலாளர் ஒருவருக்கே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குடும்ப வாழ்க்கையை சீர்குலைத்தமைக்காக நபர் ஒருவருக்கு உச்ச நீதிமன்றம் 150 லட்ச ரூபா அபராதம் விதித்துள்ளது.
நுகேகொடை பிரதேச வர்த்தகர் ஒருவரே இவ்வாறு நட்ட ஈட்டைப் பெற்றுக்கொள்ள உள்ளார். குறித்த வர்த்தகரின் மனைவியுடன், விமானப் பொறியாளர் தகாத உறவைப் பேணியதாக தெரிவிக்கப்படுகிறது.
குடும்ப ஐக்கியத்தை சீர்குலைத்தமை, திருமண வாழ்க்கைக்கு இடையூறு ஏற்படுத்தியமை, அநாகரீகமாக செயற்பட்டமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் குறித்த விமானப் பொறியியலாளருக்கு எதிராக சுமத்தப்பட்டிருந்தது.
வர்த்தகரின் மனைவியுடன் கள்ளத் தொடர்பு ஒன்றைப் பேணிய விமானப் பொறியியலாளர், ஹோட்டல் ஒன்றில் உல்லாசமாக இருந்த போது அங்கு சென்ற வர்த்தகர் அவரைத் தாக்கியுள்ளார். அதன் பின்னர் இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
தமது குடும்ப வாழ்க்கையை சீர்குலைத்ததாகத் தெரிவித்து வர்த்தகர் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.
மாவட்ட மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றங்களில் அளிக்கப்பட்ட தீர்ப்பினை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது. இதன்படி குறித்த விமானப் பொறியியலாளர், குறித்த வர்த்தகருக்கு 150 லட்ச ரூபா நட்ட ஈடாக வழங்க வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.

ad

ad