நான் அமைதியாக இருக்கிறேன் என்று யாரும் கருதிவிட வேண்டாம்! மு.க.அழகிரி பேச்சு!
முதல் அமைச்சர் பதவியோ, பிரதமர் பதவியோ என் கால் தூசுக்கு சமம். என் தொண்டர்கள் என்னோடு இருக்கும் பதவி மட்டும்
போதும் எனக்கு. நான் தலைவர் பதவிக்கோ, வேறு பதவிக்கோ ஆசை பட்டது கிடையாது. என்னை கலைஞர் தான் தென்மண்டல அமைப்புச் செயலாளராக ஆக்கினார்.தென் மாவட்டங்களில் நடந்த இடைத்தேர்தல்களில் வெற்றியை தேடி தந்ததால் என்னை மதுரை எம்பியாக போட்டியிடச் சொல்லி கலைஞர் தான் அறிவித்தார். நானும் எம்.பி.,யாகி மதுரை மக்களுக்கு நிறைய செய்திருக்கிறேன். எனக்கு பதவி வேண்டும் என்று கேட்டதில்லை. என்னோடு இருப்வர்களுக்கு பதவி வாங்கித் தருவது எனது கடமை.
நான் அமைதியாகவும், பொறுமையாகவும் இருப்பதாக இங்கு கோபிநாதன் குறிப்பிட்டார். தற்போது, நான் அமைதியாக இருக்கிறேன் என்று யாரும் கருதிவிட வேண்டாம். இன்னும் 3 மாதத்தில் எனது திட்டத்தை அறிவிப்பேன். அப்போது என் முடிவு தெளிவாக இருக்கும் என்றார்.