புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 பிப்., 2014


இருட்டுப் பிரதேசங்களையும் வெளிச்சம் போட்டுக் காட்டியவர்பாலுமகேந்திரா : வைரமுத்து
இயக்குநர் பாலுமகேந்திரா மறைவுக்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்,   ‘’இந்த உலகத்தை  அழகாகக் காண்பதற்கு மனிதக் கண்களுக்குச் சொல்லிக் கொடுத்தவர் பாலுமகேந்திரா. அதனால் தான் கண்ணுள்ள ரசிகர்கள் இன்று கண்கலங்குகிறார்கள்.
தன்னை அழகாகக் காட்டியவர் இன்றில்லையே என்று கண்கள் இருந்தால் நிலா அழும் வாய் இருந்தால் பூ புலம்பும்.சூரியனைப் பனித்துளியாகவும் பனித்துளியைச் சூரியனாகவும் நிறப்பிரிகை செய்த ஒளிப்பதிவு மேதை அவர்.


பாலு மகேந்திரா ஒரு படைப்பாளி மட்டுமல்ல, அவர் ஓர் இலக்கியவாதி. உலகத்தின் தலைசிறந்த படைப்புகளையெல்லாம் காதலோடு கற்றவர். அந்த இலக்கியச் சாரங்களை வெள்ளித்திரையில் பிம்பப்படுத்தியவர். மூன்றாம் பிறை,  உன் கண்ணில் நீர் வழிந்தால்,  நீங்கள் கேட்டவை ஆகிய படங்களில் அவருக்கு நான் பாடல் எழுதிய நாட்கள் சுகமானவை. மனித மனங்களின்  இருட்டுப் பிரதேசங்களையும் வெளிச்சம் போட்டுக் காட்டியவர் அவர். தம் ஒளிப்பதிவின் மூலம் தமிழ்த் திரைப்படங்களை இந்திய உயரத்திற்கு ஏற்றியவர்’’ என குறிப்பிட்டுள்ளார்.

ad

ad