புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 மார்., 2014

பிரான்சில் குழந்தைகளை தனியறையில் அடைத்து வைத்து வளர்த்து வந்த பாண்டிசேரி தமிழ்க்குடும்பம் கைது

பிரான்சில் பரிசை அண்டிய புறநகர்ப்பகுதியான  லாக்கூர்நெவ்வில் தனித்து ஒரு அறைக்குள்ளேயே அடைத்து வைத்து வளர்க்கப்பட்ட 2 மாதம் முதல் 6 வயதுக் குழந்தை வரையான நான்கு
பிள்ளைகள் சமூகசேவையினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளனர்.  இந்தியாவின் பாண்டிச்சோியைச் சேர்ந்த ஒரு
தமிழக் குடும்பத்தினரே இவ்வாறு    தங்கள் குழந்தைகளை வெளியே அனுப்பாது வளர்த்துள்ளனர் என தொிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகள் பிறந்த நாள் முதல் லாக்கூர்நெவ்விலுள்ள உள்ள ஒரு தொடர்மாடிக் கட்டடத்திலுள்ள (la cité des 4000) ஒரு வீடடில் ஒரு அறைக்குள்ளேயே வைத்து வளர்கப்பட்டுள்ளனர்.

ஜனவரி மாதத்தில் பிறந்த ஒரு கைக்குழந்தைதையை மருத்துவப் பரிசோதனைக்காக இந்தப் பெற்றோர்  Seine-Saint-Denis இலுள்ள ஒரு வைத்தியமையத்திற்குக் கொண்டு சென்றபோதே வைத்தியர்கள் சமூகசேவையினர்க்கும் குழந்தைகள் பாதுகாப்பு மையத்திற்கும் அறிவித்துள்ளனர்.
அங்கு பரிசோதனைக்காக வந்த குழந்தை சில நாட்களிற்கு முன்னரே பிறந்திருந்தது என்றும் அந்தக் குழந்தையின் பிறப்பு எந்த வைத்தியசாலையிலும் பதிவு செய்ப்படாமல் இருந்தமையே வைத்தியர்களிற்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியிருந்தது.

இந்தக் குடும்பத்தில் ஆறரை வயது, ஐந்தரை வயது மற்றும் இரண்டு வயதுடைய ஆண்குழந்தைகளும் மூன்று மாதங்களாகும் ஒரு பெண்குழந்தையும்  உண்டு. இதில் இரு பிள்ளைகள் பிறப்பிலேயே ஊனமுற்ற குழந்தைகளாகப் பிறந்துள்ளனர். இந்தக் குழந்தைகளிற்கான எந்த விதமான அரச பதிவுகளும் செய்யப்பட்டிருக்கவில்லை. அவர்களிற்கான தடுப்பு ஊசிகள் எதுவும் போடப்பட்டிருக்கவில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக இவர்கள் யாரும் பாடசாலைகளில் சேர்க்கப்பட்டும் இருக்கவில்லை. இந்தக் குழந்தைகள் யாரும் எதற்காகவும் எந்த மருத்துவரிடமும் கொண்டு செல்லப்பட்டிருக்கவில்லை. அதை விட மோசமாக இந்தக் குழந்தைகள் யாரும் அந்த வீட்டை விட்டு வெளியே வந்ததே இல்லை.

பிரான்சில் இக்குற்றங்களுக்கு குறைந்தபட்ச தண்டனையாக ஏழு வருடங்கள் சிறையிலிட முடியும் என தொிவிக்கப்படுகின்றது.

ad

ad