புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 மார்., 2014

ஐ.நா மனித உரிமை புதிய ஆணையாளராக மர்சுகி தருஸ்மன் நியமிக்கப்பட வாய்ப்பு..இலங்கைக்குப் பெருந்தலைவலி.
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பதவிக்கு, இந்தோனேசியாவின் முன்னாள் சட்டமா அதிபரும், ஏற்கனவே  இலங்கை விவகார ஐநாவின் நிபுணர் குழுவின் தலைவருமான மர்சுகி தருஸ்மன் நியமிக்கப்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் பதவிக்காலம் இந்த ஆண்டு ஓகஸ்ட் 31ம் நாளுடன் நிறைவடையவுள்ளது.
இதனால், புதிய ஆணையாளர் ஒருவரை, ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் முன்மொழிய, அதனை ஐ.நா பொதுச்சபை அங்கீகரிக்க வேண்டும்.
நவநீதம்பிள்ளை ஆபிரிக்க வலயத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்டதால், அடுத்த ஆணையாளர் பதவி ஆசிய வலயத்துக்கே அளிக்கப்பட வேண்டும்.
இந்தநிலையில், ஆசிய வலயத்தில் இருந்து, இந்தப் பதவிக்குப் பொருத்தமானவர்கள் தொடர்பான பட்டியல் ஒன்று ஐ.நா உயர்மட்டத்தில் தயாரிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
இதன்படி, இந்தோனேசியாவின் முன்னாள் சட்டமா அதிபரும், அனைத்துலக அளவில் மனிதஉரிமைகளுக்காக பாடுபடுபவருமான, மர்சுகி தருஸ்மனின் பெயரே முன்னிலையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இவர், தற்போது ஐ.நாவில் சிறப்பு அறிக்கையாளராகப் பணியாற்றி வருகிறார்.
இவரே, இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்து தமக்கு ஆலோசனை வழங்குவதற்காக ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் நியமித்த, நிபுணர்குழுவின் தலைவராக பணியாற்றியவராவார்
அத்துடன் இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்து அனைத்துலக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று இவர் தொடர்ந்தும் பல்வேறு அனைத்துலக கருத்தரங்குகளிலும், ஊடகங்களிலும் கருத்துகளை வெளிப்படுத்தி வருகிறார்.
அடுத்த ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளராக, மர்சுகி தருஸ்மன் நியமிக்கப்பட்டால், இலங்கைக்குப் பெருந்தலைவலியாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இலங்கைக்குப் பெருந்தலைவலி,

ad

ad