புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 மார்., 2014

ஜெனிவா பிரச்சினை திமிங்கிலத்திற்கும் நெத்திலி மீனுக்குமான போராட்டம்!- நிமால் சிறிபால டி சில்வா
இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணை ஒன்று நடத்தப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தற்போது மாற்றம் ஏற்பட்டு வருவதாக அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
ஜெனிவா மனித உரிமை பேரவையின் கூட்டத் தொடரில் இலங்கை பிரதிநிதிகள் குழுவின் உறுப்பினர்களில் ஒருவராக கலந்து கொண்ட அமைச்சர் நாடு திரும்பியுள்ளதுடன் இலங்கை சம்பந்தமான பிரேரணை குறித்த தற்போதைய நிலைமைகள் பற்றி தெளிவுப்படுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த பிரச்சினையானது தற்போது திமிங்கிலத்திற்கும் நெத்திலி மீனுக்குமான போராட்டமாக மாறியுள்ளது.
இலங்கை சம்பந்தமாக அமெரிக்கா மற்றும் பிரித்தானியா கொண்டு வரும் இந்த பிரேரணையானது பகையுணர்வுடன் கூடியது.
ஏனைய நாடுகள் கூட அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவின் அழுத்தங்களுக்கு அடிபணிந்துள்ளன.
எனினும் இந்த நாடுகள் தமது நிலைப்பாடுகளை இதுவரை பகிரங்கமாக அறிவிக்கவில்லை.
வாக்கெடுப்பு நடத்தப்படும் இறுதி சந்தர்ப்பம் வரை அந்த நாடுகளின் நிலைப்பாடுகள் பற்றி அறிந்து கொள்ள முடியாது.
சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற யோசனை பிரேரணையில் நேரடியாக முன்வைக்கப்பட மாட்டாது. ஆனால் மறைமுகமாக அப்படியான யோசனை முன்வைக்கப்படலாம்.
நேரடியான சர்வதேச விசாரணைக்கு பதிலாக சில அழுத்தங்களை ஏற்படுத்தும் பின்னணி உருவாகி வருகிறது என்றும் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா கூறியுள்ளார்.

ad

ad