புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

24 மார்., 2014

மேலும் சில கட்சி தலைவர்கள் என்னை சந்திப்பார்கள்: மு.க.அழகிரி பேட்டி
ராஜபாளையத்தில் நடந்த காதணி விழாவுக்கு மு.க.அழகிரி சென்றார். அங்கு செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
இந்த தொகுதியில் போட்டியிடும் டாக்டர் கிருஷ்ணசாமி, மு.க.அழகிரியால் பாதிப்பும் இல்லை. திமுகவுக்கும் பாதிப்பு இல்லை என்று சொல்லியிருக்கிறார். அவர் எப்படி
வெற்றி பெறுகிறார் என்று பார்ப்போம். அவர் மூன்றாவது இடத்திற்குத்தான் வருவார். கட்சி தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் வாய்ப்பு கொடுக்க வேண்டும். தொழிலதிபர்களுக்கும், மாற்று கட்சியினருக்கும் வாய்ப்புகொடுத்தால் எப்படி திமுக வெற்றி பெறும். வைகோ மரியாதை நிமித்தமாக என்னை சந்தித்தார். என்னிடம் ஆதரவு கேட்டார். ஆதரவாளர்களை கேட்டு முடிவை சொல்லுவதாக தெரிவித்தேன். மேலும் சில தலைவர்கள் என்னை சந்திக்க தயாராக உள்ளார்கள். ஆகையார் ஆதரவாளர்களை சந்தித்து வருகிறேன். அவர்களின் ஆலோசனையின்படி முடிவு எடுக்கப்படும் என்றார்.