புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 மார்., 2014



20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி வெஸ்ட் இண்டீசை தோற்கடித்து 2-வது வெற்றியை சுவைத்தது.
வெஸ்ட் இண்டீஸ் திணறல்
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் நேற்றிரவு மிர்புரில் நடந்த (குரூப்2) லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் இந்தியாவும்,
நடப்பு சாம்பியன் வெஸ்ட் இண்டீசும் மோதின. டாஸ் ஜெயித்த இந்திய கேப்டன் டோனி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
இதையடுத்து கிறிஸ் கெய்லும், வெய்ன் சுமித்தும் வெஸ்ட் இண்டீசின் இன்னிங்சை தொடங்கினர். ‘அபாயகரமான ஜோடி’ என்று வர்ணிக்கப்படும் இவர்கள் இந்திய பந்து வீச்சில் தடுமாறினர். குறிப்பாக வெய்ன் சுமித் அதிரடி காட்ட முடியாமல் பரிதவித்தார். வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர்குமார் ‘பவர்-பிளே’யில் தனது முதல் 3 ஓவர்களில் வெறும் 3 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து மிரட்ட, அதன் பிறகு சுழற்பந்து வீச்சாளர்கள் பிடியை மேலும் இறுக்கி அழுத்தம் கொடுத்தனர்.
2 முறை தப்பிய கெய்ல்
இதற்கு மத்தியில் கிறிஸ் கெய்ல் இரண்டு முறை கண்டம் தப்பினார். ரன் கணக்கை தொடங்கும் முன்பு, ஸ்லிப்பில் கொடுத்த கேட்ச் வாய்ப்பை அஸ்வின் தவற விட்டார். 19 ரன்களில் பந்தை தூக்கியடித்த போது டீப் மிட்விக்கெட் திசையில் எல்லைக்கோடு அருகே மிக எளிதான கேட்ச் வாய்ப்பை யுவராஜ்சிங் வீணடித்தார். ஆனாலும் ‘சிக்சர் மன்னன்’ கிறிஸ் கெய்லால் அணிக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏதும் வந்து விடவில்லை.
சுமித் 11 ரன்னிலும் (29 பந்து), கிறிஸ் கெய்ல் 33 பந்துகளில் ஒரு பவுண்டரி, 2 சிக்சருடன் 34 ரன்களிலும் (ரன்-அவுட்) வெளியேறினார்கள். பந்து வீச்சுக்கு ஏற்ற ஆடுகளத்தை நமது சுழல் சூறாவளிகள் துல்லியமாக பயன்படுத்தி, வெஸ்ட் இண்டீசை நிமிர விடாமல் கட்டுப்படுத்தினர். சாமுவேல்ஸ் (18 ரன்), வெய்ன் பிராவோ (0), கேப்டன் டேரன் சேமி (11 ரன்) சுழலில் சிக்கி சிதறினர்.
130 ரன்கள் இலக்கு
இருப்பினும் கடைசி ஓவர் மட்டும் நமது கையை விட்டு போய் விட்டது என்று சொல்லலாம். 20-வது ஓவரை வீசிய ரவீந்திர ஜடேஜா அந்த ஓவரில் 3 சிக்சர் உள்பட 21 ரன்களை வாரி இறைத்தார். இதனால் அவர்களின் ஸ்கோர் கணிப்பை விட கொஞ்சம் கூடி விட்டது. ஆனால் 3 ஓவர்களில் 3 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்திருந்த புவனேஷ்வர்குமாரை கடைசி ஓவருக்கு கேப்டன் டோனி அழைக்காதது வியப்பை அளித்தது.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 7 விக்கெட் இழப்புக்கு 129 ரன்கள் சேர்த்தது. இந்தியாவின் பீல்டிங் மட்டும் கனகச்சிதமாக அமைந்திருந்தால் வெஸ்ட் இண்டீஸ் 100 ரன்களை கடப்பதே திண்டாட்டமாக இருந்திருக்கும். இந்திய தரப்பில் ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளும், அமித் மிஸ்ரா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
கோலி 54 ரன்
பின்னர் 130 ரன்கள் இலக்கை நோக்கி இந்திய அணி ஆடியது. தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான்(0) முதல் ஓவரிலேயே எல்.பி.டபிள்யூ. முறையில் வீழ்ந்தார். இதன் பின்னர் ரோகித் ஷர்மாவும், விராட் கோலியும் ஜோடி சேர்ந்தனர். வெஸ்ட் இண்டீஸ் பவுலர்கள் ஆதிக்கம் செலுத்தி விடக்கூடாது என்பதற்காக கோலி ஆரபத்திலேயே அதிரடியில் இறங்கினார். அதன் பிறகு ரோகித் ஷர்மாவும் வேகம் காட்ட, இந்திய அணி சிரமமின்றி இலக்கை நோக்கி பயணித்தது. 2-வது விக்கெட்டுக்கு இவர்கள் 106 ரன்கள் சேர்த்து கலக்கினர். 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் இந்திய அணி 2-வது விக்கெட்டுக்கு எடுத்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.
அபாரமாக ஆடிய விராட் கோலி 54 ரன்களில் (41 பந்து, 5 பவுண்டரி, ஒரு சிக்சர்) கிளீன் போல்டு ஆனார். அடுத்து வந்த யுவராஜ்சிங் மந்தமாக ஆடி வெறுப்பேற்றியதுடன், ஆட்டத்தையும் தேவையில்லாமல் கடைசிவரை கொண்டு சென்று விட்டார். யுவராஜ்சிங்(19 பந்து, 10 ரன்) கடைசி ஓவரின் 3-வது பந்தில் விக்கெட்டை இழந்தார். அடுத்து இறங்கிய சுரேஷ் ரெய்னா வெற்றிக்குரிய ரன்னை அடித்து ஒரு வழியாக முடித்து வைத்தார்.
இந்தியா 2-வது வெற்றி
இந்திய அணி 19.4 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 130 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ரோகித் ஷர்மா 62 ரன்களுடன் (55 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்) களத்தில் இருந்தார். தொடர்ந்து 2-வது முறையாக சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.
இந்தியாவுக்கு இது 2-வது வெற்றியாகும். ஏற்கனவே தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானை தோற்கடித்து இருந்தது. இதன் மூலம் இந்திய அணி அரைஇறுதி வாய்ப்பை பிரகாசப்படுத்திக் கொண்டுள்ளது. இந்திய அணி அடுத்து வங்காளதேசத்தை வருகிற 28-ந்தேதி சந்திக்கிறது.
ஸ்கோர் போர்டு
வெஸ்ட் இண்டீஸ்
வெய்ன் சுமித் (சி) அண்ட்
(பி) அஸ்வின் 11
கெய்ல் (ரன்-அவுட்) 34
சாமுவேல்ஸ் (ஸ்டம்பிங்)
டோனி (பி) மிஸ்ரா 18
சிமோன்ஸ் (சி) தவான் (பி)
ஜடேஜா 27
வெய்ன் பிராவோ
எல்.பி.டபிள்யூ (பி) மிஸ்ரா 0
டேரன் சேமி (சி) ரோகித்
(பி) ஜடேஜா 11
ஆந்த்ரே ரஸ்செல் (சி) கோலி
(பி) ஜடேஜா 7
சுனில் நரின் (நாட்-அவுட்) 7
ராம்டின் (ரன்-அவுட்) 0
எக்ஸ்டிரா 14
மொத்தம் (20 ஓவர்களில்
7 விக்கெட்டுக்கு) 129
விக்கெட் வீழ்ச்சி: 1-38, 2-62, 3-74, 4-74, 5-97, 6-108, 7-121
பந்து வீச்சு விவரம்
புவனேஷ்வர்குமார் 3-0-3-0
முகமது ஷமி 3-0-27-0
அஸ்வின் 4-0-24-1
அமித் மிஸ்ரா 4-0-18-2
சுரேஷ் ரெய்னா 2-0-8-0
ரவீந்திர ஜடேஜா 4-0-48-3
இந்தியா
ரோகித் ஷர்மா (நாட்-அவுட்) 62
தவான் எல்.பி.டபிள்யூ (பி) பத்ரீ 0
விராட் கோலி (பி) ரஸ்செல் 54
யுவராஜ்சிங் (சி) கெய்ல் (பி)
சாமுவேல்ஸ் 10
ரெய்னா (நாட்-அவுட்) 1
எக்ஸ்டிரா 3
மொத்தம் (19.4 ஓவர்களில்
3 விக்கெட்டுக்கு) 130
விக்கெட் வீழ்ச்சி:1-1,2-107,3-129
பந்து வீச்சு விவரம்
பத்ரீ 4-0-28-1
சான்டோகி 4-0-27-0
சுனில் நரின் 4-0-20-0
வெய்ன் பிராவோ 1-0-12-0
டேரன் சேமி 1-0-9-0
சாமுவேல்ஸ் 3.4-0-22-1
ரஸ்செல் 2-0-12-1

ad

ad