புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 மார்., 2014

ஜெயலலிதாவை சினிமாவில் மட்டுமே பார்க்கலாம்: ப.சிதம்பரம் கிண்டல்
சிவகங்கை தொகுதி சாக்கோட்டை ஒன்றியத்தில், தனது மகனும், அத்தொகுதியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளருமான கார்த்தி சிதம்பரத்தை ஆதரித்து, அவர் பேசியதாவது
;

கடந்த 5 ஆண்டில், தொகுதிக்கு என்ன செய்தோம் என கேட்கின்றனர். அதை தொகுதி மக்களுக்கு பட்டியலாக வழங்கியுள்ளோம். இங்கிலாந்து, இத்தாலி, மெக்சிகோ போன்ற நாடுகளில், 40 வயதுக்கு உட்பட்டவர்கள் மட்டுமே ஆட்சி செய்கின்றனர். நம்நாட்டில், 35 வயதிற்கு கீழ், 83 கோடி பேர் உள்ளனர். 
'நம் நாட்டை மட்டும், 'குடுகுடு கிழவர்கள்' ஏன் நிர்வகிக்க வேண்டும். எனவே தான், இளைஞர்கள் கையில் கொடுக்க வேண்டும்' என்றேன். அதன்படியே, 'ராகுல் தலைமையில் இளைஞர்கள் பொறுப்பேற்க வேண்டும்' என காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.
ஜெயலலிதா கால் மண்ணில் படாது. வானம் வழியே வந்து சென்றுவிடுவார். அவர் கடைசியாக, 1980ல் நடித்த 'நதியை தேடி வந்த கடல்' என்ற படத்தில் மட்டுமே அவரை பார்க்கலாம். இவ்வாறு ப.சிதம்பரம் பேசினார்.

ad

ad