புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 மார்., 2014

பிரித்தானிய தம்பதியை கடத்தியவர்களுக்கு சிறைத் தண்டனை விதிப்பு
இலங்கை வம்சாவளியை சேர்ந்த கணவன் மற்றும் மனைவியை சென்னையில் வைத்து கடத்திய சம்பவத்துடன் தொடர்புடைய இருவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
59 வயதான கணபதிப்பிள்ளை தவராஜா அவரது மனைவியான 55 வயதான சலஜாவுடன் இந்தியாவுக்கு சென்றிருந்த போது கடந்த வருடம் மே மாதம் 29ம் திகதி கடத்தப்பட்டனர்.
ரமேஷ் சொர்ணலிங்கம் மற்றும் அஜந்தன் ஆகியோர் இந்த சம்பவம் தொடர்புடைய குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சொர்ணலிங்கம் என்பவருக்கு 9 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் அஜந்தன் என்பவரும் ஏழரை ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த கடத்தில் சம்பவம் தொடர்பாக சென்னையில் கைது செய்யப்பட்ட 13 பேருக்கு எதிரான வழக்கு தொடர்ந்தும் நிலுவையில் உள்ளது.
கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் 3 லட்சம் பவுண்களை கப்பமாக கோரியிருந்தனர்.
இந்த நிலையில், கடத்தப்பட்டவர்கள் கடலூர் மாவட்டம் மஞ்சகுப்பத்தில் ஒரு வீட்டில் அடைத்து வைத்திருந்த நிலையில் தமிகை பொலிஸாரினால் மீட்கப்பட்டனர்.
தமிழக பொலிஸார் நடத்திய விசாரணைகளில் தவராஜாவுக்கு சொந்தமான லண்டனில் உள்ள சிறப்பங்காடியில் பணிபுரியும் இலங்கை தமிழரான அஜந்தன் என்பவர் இந்த கடத்தல் சம்பவத்தின் சூத்திரதாரியாக செயற்பட்டது கண்டறியப்பட்டது.
லண்டனில் உள்ள திருச்சியை சேர்ந்த தனது நண்பரான ரமேஷின் உதவியுடன் அஜந்தன் இந்த கடத்தலை மேற்கொண்டுள்ளார்.
தொடர்ந்தும் விசாரணைகளை நடத்திய பொலிஸார் திருச்சியில் ரமேஷின் நண்பரான கண்ணன், இந்திரா அந்தோனி மேரி, மதியழகன், பிரபு, சரவணன், சதீஷ்குமார், வசந்த், இளங்கோ ஆகிய 8 சந்தேக நபர்களை கைது செய்தனர்.
இதனையடுத்து லண்டனில் இருந்த அஜந்தனும், ரமேசும் கைது செய்யப்பட்டனர்.

ad

ad